districts

img

காலமுறை ஊதியம் வழங்க அங்கன்வாடி ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், பிப்.8 - அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண் டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர்கள் சங்க 5  ஆவது திருப்பூர் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க 5 ஆவது திருப்பூர் ஒன்றிய மாநாடு சனியன்று தியாகி பழனிச்சாமி நிலையத்தில் சனியன்று நடைபெற் றது. இம்மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் ஆ.வனிதாமனி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மு.வேலுமணி வரவேற் றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் துவக்கி வைத்து பேசி னார். சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ஜி.சம்பத், தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் கள் சங்க மாவட்டத் தலைவர் த. சித்திரா ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.   இதில், அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர்களுக்கு முறை யான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் இறுதி மாத  ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூ தியமாக வழங்க வேண்டும். பறிக்கப் பட்ட சனிக்கிழமை வார விடுமுறை வழங்க வேண்டும். பணிக்கொடை அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் மற்றும் உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மே மாத விடுமுறை 1 மாதம் முழு மையாக வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மொத்தம் 21 பேர் கொண்ட ஒன்றி யக்குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு ஓய்வுபெற்ற அங்கன்வாடி  ஊழியர் மற்றும் உதவியாளர் நலச்  சங்க மாநிலத் தலைவர் எம்.பாக்கி யம் சிறப்புரையாற்றினார். மாவட்டச்  செயலாளர் கே.சித்ரா நிறைவுரை ஆற்றினார். முடிவில் நந்தினி நன்றி  கூறினார்.