districts

img

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடுகளை களைந்திடுக!

திருச்சிராப்பள்ளி, ஆக. 6- மருத்துவக் காப்பீடு தொடர்பாக ஓய்வூதியர்கள் அளித்த மனுக் களுக்கு விரைவில் தீர்வு காண வலி யுறுத்தி செவ்வாயன்று அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய மருத்துவ காப்பீடுத் திட்டத் தின்கீழ் ஓய்வூதியர்கள் அனுப்பி வைத்த கோரிக்கை மனுக்களின் மீது காப்பீடு நிறுவனம் காலதாமதமின்றி விரைந்து முடிவுகள் எடுக்க வேண் டும். காலதாமதத்தை கண்கா ணிக்க வேண்டிய கருவூல கணக்குத் துறையின் ஆணையாளர் மெத்த னப் போக்கை கைவிட்டு விரைந்து முடிவுகள் எடுக்க வேண்டும். ஓய்வூதி யர்கள் செலவு செய்த தொகைக்கும், காப்பீடு நிறுவனம் வழங்கும் தொகைக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் சிறு தொகை மட்டும் வழங்கப்படுகிறது. செலவுத் தொகை முழுமையாக வழங்கப்பட வேண் டும். முன்பணம் இல்லா சிகிச்சை என்ற அரசின் நோக்கத்தை நிறை வேற்ற வேண்டும். மாநில கருவூல கணக்குத்துறை ஆணையர் மனுக்களின் விவரங் களை ஒவ்வொரு ஓய்வூதியரும் தெரிந்து கொள்ளும் வகையில் Tracking System உருவாக்குவதாக ஒன்றரை ஆண்டுக்கு முன் அளித்த  வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 31.7.2024 வரை தேங்கி யுள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் நடைபெற்ற போராட் டத்திற்கு மாவட்டத் தலைவர் சிராஜூ தீன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செயலாளர் மதிவாணன், மாநிலச் செயலாளர் எம்.வி.செந்தமிழ்ச் செல்வன், மணப் பாறை வட்டக்கிளை தலைவர் வெள்ளைச்சாமி, அய்யப்பநகர் வட்டக் கிளை செயலாளர் ராஜாராமன், மண்ணச்சநல்லூர் வட்டக்கிளை செயலாளர் கலைவாணன், துறை யூர் வட்டக்கிளை செயலாளர் ராஜப்பா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனைவர் பால்பாண்டி ஆகியோர் பேசினர்.

திருவாரூர் 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் பி.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் வி.முனியன், தமிழ்நாடு ஊரக  வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில தணிக்கையாளர் எஸ்.புஷ்பநாதன் மற்றும் தோழமை சங்கத் தினர் உரையாற்றினர். மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார். மாவட்டப்  பொருளாளர் கோ.மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார். புதுக்கோட்டை தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடை பெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் மு. முத்தையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ம.வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகள் பேசினர். போராட்டத்தை ஆதரித்து அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். ரெங்கசாமி, ஊரக வளர்ச்சி துறை  ஓய்வூதியர் சங்கம் சார்பில் அய்யப் பன் ஆகியோர் பேசினர்.