districts

img

கழிவுநீருடன் கலந்து வந்த குடிநீர்

மயிலாடுதுறை, நவ.4- மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட குறிப் பிட்ட பகுதியில் பொது மக்களுக்கு விநி யோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுத்து சரிசெய்யும் பணியில் ஈடு பட்டது.  மயிலாடுதுறை நகராட்சி ஹாஜியார் நகர் மற்றும் 14 ஆவது வார்டு கருப்பண்ணசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். அப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்களின் உடல்நலம் கேள்விக் குறியாகி வருகிறது. பலமுறை நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறை யிட்டும்  நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்  உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடு துறை பூக்கடை தெரு, கும்பகோ ணம் பிரதான சாலையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் டி.துரைக்கண்ணு தலைமையில் போராட்டம் நடை பெற்றது. குடிநீர், மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய், பொதுக் கழிப்பறை மையம் போன்ற மக்களின் அடிப் படை கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற இந்த போராட்டத்தையடுத்து, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், காவல்துறை  அதிகாரிகள் நேரில் வந்து, கோரிக்கை களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, உடனே சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜி.ஸ்டாலின், மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.ரவீந்திரன், சிஐடியு மாவட்ட துணைத்  தலைவர் ஆர்.ராமானுஜம், இந்திய மாணவர்  சங்க மாவட்டச் செயலாளர் மணிபாரதி, கட்சி யின் நகரக் குழு உறுப்பினர்கள், சிறுபான்மை  மக்கள் நலக் குழு உறுப்பினர் ஜம்ரூத் பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பல மாதங்களாக நீடித்த இந்தப் பிரச்ச னைக்கு தீர்வு காணப்பட்டதால், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்பகுதி மக்கள்  நன்றி தெரிவித்தனர்.