districts

img

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, டிச.29-  மயிலாடுதுறை சித்தர்காட்டிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பல்  வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  பொது தொழிலாளர் சங்கம் சார்பில் வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மண்ட லத் தலைவர் சு.வேல்முருகன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் புவ னேஷ்வரன், மாநிலச் செயலாளர் என். ராசப்பன், சிஐடியு மாவட்டத் தலைவர் ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ப.மாரி யப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில், காலவரைய றைக்குள் பணி மூப்பு பட்டியலை வெளி யிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும், பொது விநியோக திட்டத்தை பலப்படுத்து, கழக பணியில் கூட்டுறவு துறை அலுவ லர்களை பயன்படுத்தக் கூடாது, இரண்டு  வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களின் பணி இடமாறுதல்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  தஞ்சாவூர்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பொது தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில், தஞ்சாவூரில், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு கண்டன வாயிற் கூட்ட ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மண்டலத் தலைவர் என்.  ராஜ்குமார் தலைமை வகித்தார். மண்டல செயல் தலைவர் சி.அனந்த பத்மநாதன், மண்டல துணைச் செயலாளர்கள் எம்.முக மது இஸ்மாயில், எம்.வினோத் கண்ணன், மண்டல துணைத் தலைவர்கள் எஸ்.செந் தில், எம்.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலச் செயலாளர் எஸ். பாண்டித்துரை, சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.ஜெயபால், மண்டலப் பொருளாளர் ஜி.கண்ணன், சிஐடியு துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, தரைக் கடை சங்க மாவட்டத் தலைவர் ராஜா மற்  றும் பலர் கலந்து கொண்டனர்.