மயிலாடுதுறை, அக்.14 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம், திருவிளையாட்டம் கடைவீதி யில் இயங்கி வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகத்தை கொச்சைப்படுத்தி, தரம் தாழ்த்தி அவதூ றாகப் பேசியுள்ளனர் சமூக விரோதிகள். அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திங்களன்று கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் (திருவிளை யாட்டம் ஊராட்சியின் தலைவராக இரு முறை பதவி வகித்தவர்), மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர். திருவிளையாட்டம் கடைவீதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை அலுவல கம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் மையமாகவும், ஏழை-எளிய மக்களின் உரிமைகளை பெறவும், உரிமைகளை நிலைநாட்டவும் இந்த அலு வலகம் மக்களுக்காக தொடர்ந்து இயங்கி வருகிறது. திருவிளையாட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவிய பண்ணையடிமை முறையை ஒழித்துக் கட்டியது மார்க்சி ஸ்ட் கட்சி. 1960-களிலேயே தீண்டாமை பாகுபாட்டை முற்றிலும் ஒழித்துக்கட்டி 1996 மற்றும் 2017 என இருமுறை தமிழ்நாடு அரசு தீண்டாமை இல்லாத ஊராட்சி என பாராட்டி பரிசு வழங்கியுள்ளது. இரு முறையும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர், தற்போ தைய மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவிளையாட்டம் கிராமத்தை உரு வாக்கிய திராவிட கழகத்தின் மூத்த முன்னோடி அய்யா ஆ.சௌரிராசன் செய்த புரட்சி பணிகளை பாதுகாத்து, அவரது சீடர்களாக செயல்பட்டு தொ டர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த தோழர் பி.சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களும், மார்க்சிஸ்ட் கட்சி மூலம் சமூக நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்று மைக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி மக்களை பாதுகாத்து வருகின்றனர். பின்புறத் திடலை விலைக்கு வாங்கியவர்களின் பொய்ப் புகார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திரு விளையாட்டம் கிராமம் விளங்க காரண மாக உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகத்தின் பின்புறம் உள்ள திடலை வெளிநாட்டில் வேலை செய்யும் திரு விளையாட்டம் குப்புரான்தோப்பு பகுதி யைச் சேர்ந்த கென்னடி (த/பெ.பிலிப்) என்பவர் கடந்த ஆண்டு விலைக்கு வாங்கி யுள்ளார். இந்நிலையில் கடந்த 40 ஆண்டு களாக பொதுமக்களை பாதுகாத்து வரு கிற அலுவலகமாக செயல்படும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை அப்புறப் படுத்தும் முயற்சிக்கும் வகையில், இந்த அலுவலகத்தில் அருவருக்கத்தக்க செயல் கள் நடப்பதாக வெளிநாட்டில் வேலை செய்யும் கென்னடி, சில சமூக விரோதி களோடு சேர்ந்து பொய்யான புகாரை அளித்துள்ளார். அதன்மூலம் அலுவல கத்தை காலி செய்ய கடந்த சில மாதங் களாக முயற்சித்து வருகிறார். இதற்கு நெடுஞ்சாலைத் துறையும், வருவாய்த் துறையும் துணை நிற்கின்றன. சில அதி காரிகள் அதற்கு ஆதரவாக செயல்படு கின்றனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பொய்யான அவதூறு புகாரை வைத்து நீதிமன்றம் மூலம் கட்சி அலு வலகத்தை அகற்றப் போவதாக காவல் துறை படையுடன் வருவாய்த்துறை, நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது, மார்க்சிஸ்ட் கட்சியினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமூக விரோதிகள் அளித்த அவதூறு புகார் குறித்து கேள்வி எழுப்பினர். வட்டாட்சியர் விசாரணை அதுகுறித்து பொதுமக்களிடம் விசா ரணை நடத்தி, உரிய பதிலை கூறுமாறு வற்புறுத்தினர். இதையடுத்து, தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் விசாரணை மேற் கொண்டார். அதில் சமூக விரோதிகள் அளித்த பொய்ப் புகாரில் கூறியது போல, எதுவும் நடக்கவில்லை என்றும், அவை அனைத்தும் பொய்யான புகார் என கையெழுத்திட்டு சான்றளித்துள்ளார். நீதிமன்ற ஆணை குறித்து, மூத்த வழக்கறிஞர்களிடம் ஆய்வு செய்ததில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அப்புறப்படுத்தச் சொல்லி எந்தவித உத்தரவும் இல்லையென்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே சமூகவிரோதி களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரி களை கண்டித்தும், பொய்ப் பிரச்சாரம் செய்யும் குற்றவாளிகள் மீது உரிய நடவ டிக்கையும் எடுக்க கோரி திங்களன்று போராட்டம் நடத்த தயாராயினர். இந்நிலையில் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சாலை மறி யல் போராட்டத்தை கைவிட்டு, கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.