திருச்சிராப்பள்ளி, பிப்.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை வட்டக்குழு சார்பில் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஞாயிறன்று மணப் பாறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மணப்பாறை வட்டச் செய லாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டக் குழு உறுப்பினர் சீனி வாசன் வரவேற்றார். புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், வட்டக் குழு உறுப்பினர்கள் சுரேஷ், கண்ணன் ஆகி யோர் பேசினர். மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னதுரை சிறப்புரையாற்றினார். வட்டக் குழு உறுப்பினர் இளமாறன் நன்றி கூறி னார். மாவட்டக் குழு உறுப்பினர் நஸ்ரின் பானு மற்றும் வட்டக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சி வளர்ச்சி நிதி மாநி லக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏவிடம் வழங்கப்பட்டது.