மயிலாடுதுறை, ஜூலை 3 -
மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் அருகேயுள்ள ஆறுபாதி கிராமத்தில் ஞாயிறன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு ஒன்று எரிந்து சாம்பலானது. ஆறுபாதி ஊராட்சி திருஞானசம்பந்தர் தெருவைச் சேர்ந்தவர் அழகர் (55). இவ ரது கூரை வீடு ஞாயிறன்று இரவு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக வீட்டில் இருந்த அழகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து வெளியே வந்து, அருகில் இருந்தவர் களோடு சேர்ந்து தீயை அணைக்க முயற்சித் தனர். ஆனால் பலத்த காற்று வீசியதால் தீ வீடு முழுவதும் பரவி எரிந்து சாம்பலா னது.
விபத்து குறித்த தகவலின் பேரில், தீய ணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து, தீ மேலும் பரவா மல் அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டிலி ருந்த மின்சாதன பொருட்கள், பீரோ மற்றும் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.
தகவலறிந்த பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 ஆயிரம், மண்ணெண்ணெய், வேட்டி, புடவை, அரிசி, போர்வை உள்ளிட்ட நிவா ரணப் பொருட்களையும், தனது சொந்த நிதி யிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கி ஆறு தல் கூறினார்.