நாகப்பட்டினம் மே 14- நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு உட்பட அனைத்து நவீன வசதிகளையும் தொடர்ந்து செயல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா. ராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநிலச் செயலாளர் சா. டானியல் செயசிங் உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. தங்கமணி,கூட்டுறவு சங்கம் சார்பில் ஆர்.முத்துராஜா,உள்ளிட்டோர் ஆதரி த்துப் பேசினர். மாவட்ட பொருளாளர் பஅந்துவன்சேரல் கலந்துகொண்டனர்.