districts

img

கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துக!

விழுப்புரம்,டிச.3- விழுப்புரம் நகராட்சி பகுதியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் க.பொன்முடி ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மகாராஜாபுரம், ஆசிரியர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் கனமழையால் நீர் வேளியேறமால் தேங்கி நின்றது. இந்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் க.பொன்முடி பார்வையிட்டு அங்கு சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றப்படுவது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வு பணியின்போது, சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன், நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.nஜயச்சந்திரன், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்தரஷா ஆகியோர் உடனிருந்தனர்.