districts

img

ஆலங்குடியில் விவசாய நிலங்களைப் பாதிக்காமல் சுற்றுப்பாதை அமைத்திடுக!

புதுக்கோட்டை, ஜூலை 10-

     ஆலங்குடியில் விவசாய நிலங்களை பாதிக்காத வகை யில் சுற்றுப்பாதை அமைக்க வேண்டுமென தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

   புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரத்தில் போக்கு வரத்து நெருக்கடியைத் தவிர்க்  கும் வகையில் நகரின் தென் பகுதியில் ஊருக்கு வெளியே நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அரைவட்ட சுற்றுப்பாதை அமைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கிழக்கிலிருந்து மேலாத்தூரில் தொடங்கி சிக்கப்பட்டி, கல்லாலங்குடி, கரும்பிராங்கோட்டை வழியாக  ஆலங்குடியின் மேற்குப்பகுதி யில் சுமார் 6 கி.மீட்டர் தொலை வில் இந்த அரைவட்டச் சாலை அமையவுள்ளது.

    இந்தச் சாலைக்காக அதிகாரி கள் முதலில் வரைபடம் தயா ரிக்கும் போது கின்னக்குடிக் குளம், கொன்னைக்குளம், உடையான்குளம் ஆகிய குளங்க ளில் கரைப்பகுதிகளை ஒட்டி அமைத்தனர். இதனால், கரை யோரங்களில் உள்ள புறம்  போக்கு நிலங்களே, பெரும்பா லும் சாலை அமையும் வகையில் வரைபடமாக இருந்தது. குறிப்  பிட்ட சில இடங்களில் மட்டுமே  விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த வேண்டியி ருந்தது.

     ஆனால், தற்போது கரை யை விட்டு தள்ளி விவசாய விளை நிலங்களுக்குள் சாலை அமைக்க அதிகாரிகளால் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்  படுகிறது. அப்படி அமைக்கப் பட்டால் கரும்பிராங்கோட்டை கிராமத்தில் உள்ள பல விவ சாயிகளின் நிலங்களை, முழு மையாக சாலை அமைக்க கைய கப்படுத்தும் நிலை ஏற்படும். மேலும் சில வீடுகளையும், ஆழ்  துளைக் கிணறுகளையும் அப்பு றப்படுத்த வேண்டியிருக்கும்.  

   பொதுவாக, இக்கிராமங்க ளில் பெரும்பகுதியான விவசாயி கள் கால், அரை, ஒரு ஏக்கருக் குள்ளாகவே நிலங்கள் வைத்  துள்ளனர். இதனால், இருக்கின்ற  நிலம் முழுவதும் சாலை  அமைப்பதற்காக கையகப் படுத்தப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிக்  கப்படும் சூழல் உருவாகிவிடும் என மக்கள் வேதனை தெரி வித்துள்ளனர்.

    எனவே, ஏற்கனவே திட்ட மிட்டு இருந்தபடி பெரும்பகுதி யான புறம்போக்கு நிலங்களை உள்ளடக்கிய, குளங்களை ஒட்டிய வழித்தடத்தில் சாலை அமைக்க வேண்டுமென அப் பகுதி விவசாயிகள் அரசை வலி யுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் விவ சாயிகளின் வாழ்வாதாரம் பறி போகாத வகையில் மேற்படி அரைவட்ட சுற்றுப்பாதையை அமைக்க வேண்டுமென வலி யுறுத்தி வருகிறது.

   இந்நிலையில், மேற்படி இடத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாநி லத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, உங்களின் கோரிக்கை யை தொகுதி அமைச்சரின் கவ னத்திற்கும், அரசின் கவனத்திற் கும் கொண்டு சென்று உரிய நட வடிக்கை எடுப்பதாகத் தெரி வித்தார். அவருடன் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.