districts

img

தரங்கம்பாடிக்கு வந்து 317 ஆண்டுகள் நிறைவு தமிழறிஞர் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா

தரங்கம்பாடி, ஜூலை 9-

    தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர்களில் ஜெர்மனி நாட்டவரான சீகன்பால்குவும் மிக முக்கியமானவர்.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரான கிறிஸ்தவ மத போதகர் சீகன்பால்கு வந்த மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடிக்கு 317 ஆவது ஆண்டு தினம் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது.

   தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில், சீகன்பால்குவும், அவ ரது நண்பர் ஹென்றிக் புளுச்சோவும் டென்மார்க்கிலிருந்து சோபியா ஹெட்விக் என்னும் கப்பல் மூலம் 222 நாட்கள் பயணம் செய்து 1706 ஜூலை  9 அன்று தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்தடைந்தனர்.                      

   தரங்கம்பாடி மற்றும் அதை யொட்டி உள்ள கிராமங்களில் வாழ்ந்த  மக்களின் அன்பால், அவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்காகவும், தமி ழின் மீதான ஆர்வத்தாலும்  கடற்கரையை  ஒட்டியுள்ள மாசிலாமணிநாதர் ஆல யத்தில் அர்ச்சகராக வேலை செய்த  அர்ச்சகரிடம் தமிழை கற்றுக் கொண் டார். படிப்படியாக தமிழில் தேர்ச்சி பெற்று, ஜெர்மனி நாட்டிலிருந்து அச்சு  இயந்திரத்தை வரவழைத்து பொற் கொல்லர்களை கொண்டு சிறிய அளவி லான தமிழ் எழுத்து அச்சுகளை உரு வாக்கி, 47 ஆயிரம் சொற்களை கொண்ட தமிழ் அகராதியை உரு வாக்கினார்.

    இதுமட்டுமின்றி, 1711 இல் பொறை யாறு அருகே உள்ள ‘கடுதாசிப் பட்டறை’ என்று இன்றும் அழைக்கப் படும் கிராமத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக இயந்திரம் மூலம் காகிதத்தில் அச்சடிக்கக் கூடிய அச்ச கத்தை நிறுவி புதிய ஏற்பாட்டை (பைபிள்) அச்சடித்து வெளியிட்டார்.  மேலும் தமிழ் இலக்கியங்கள் மற்றும் கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, இந்து சமய கடவுள்களின் வர லாறு உள்ளிட்ட அரிய நூல்களை தமிழில் எழுதி காகிதத்தில் அச்சடித்து முதல் முதலாக வெளியிட்ட பெருமை யும் இவரையே சாரும்.

    தமிழ்மொழி மீது தனக்குள்ள ஆர்வத்தின் காரணமாக தன்னுடன் வந்த சீடர்களுக்கும் தமிழை கற்றுக் கொடுத்து, பின்னர் அவர்களை ஜெர்ம னிக்கு அனுப்பி அங்குள்ள ஹல்லே   பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவச் செய்து, தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.  

    1715 ஆம் ஆண்டு மரியா டாரத்தி  என்பவரை மணந்தார். கிராமப் புறங் களில் பெண்களுக்கான உரிமைகளை நிலை நாட்டுவதில், சீகன்பால்குவும் அவரது துணைவியார் மரியாவும் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். இதன் பலனாக, தரங்கம்பாடியில் மாணவியர் விடுதி, தையல் பயிற்சி பள்ளி என வளர்ச்சிப் பணிகளை மேற் கொண்டனர்.  

    1716 ஆம் ஆண்டு தரங்கம்பாடி யைச் சேர்ந்த மலையப்பன் என்ப வரை ஐரோப்பாவிற்கு தன்னுடன் அழைத்துச் சென்று, அங்கு தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ்மொழியின் பெருமைகளையும் பரப்பினார். மேலும் ஆசியாவிலேயே முதல் சீர்திருத்த திருச் சபையான  புதிய எருசலேம் ஆல யத்தை 1718 கட்டினார். முதன்முத லாக காகிதத்தில் தமிழ் காலண்டரை அறிமுகப்படுத்தினார். இலவச பாடல் நூல்களை தமிழில் அச்சடித்து வழங்கி னார். 13 ஆண்டுகள் மட்டுமே தரங்கம் பாடியில் வாழ்ந்த சீகன்பால்கு, மதத்தை மட்டும் பரப்பாமல் ஏராள மான சமூக பணிகளையும் மேற்கொண் டுள்ளார்.

    36 வயதில் உயிரிழந்த அவரது உடல் புதிய எருசலேம் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரை நினைவுகூர்ந்து, ஆண்டுதோறும் ஜூலை 9 அன்று தமிழ் சுவிசேஷ லுத்த ரன் திருச்சபையினர் கொண்டாடி வரு கின்றனர்.  

    அதன்படி ஞாயிறன்று நடைபெற்ற  317 ஆவது ஆண்டு தினத்தை முன் னிட்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச் சபையின் பேராயர் முனைவர் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில் புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ் உள்ளிட்ட ஏராளமான ஆயர் கள் முன்னிலையில், சீகன்பால்கு தரங்கம்பாடி வந்திறங்கிய இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த னர். தொடர்ந்து பேரணியாக சென்று புதிய எருசலேம் ஆலயத்தினுள் உள்ள  சீகன்பால்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  

    பின்னர் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொறையார் த.பே.மா.லு கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன் மற்றும் டி.இ.எல்.சி கல்வி நிறுவ னங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

       கிறிஸ்தவ மதபோதகராக தரங்கம் பாடி வந்து தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர் சீகன்பால்குவை போற்றும் விதமாக மணிமண்டபம் ஒன்று அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  

     தரங்கம்பாடி கடற்கரை சாலையி லுள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச் சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.சிம்சன், மாவட்டக்குழு உறுப்பி னர் காபிரியேல், ஒன்றியக்குழு உறுப்பி னர் குணசேகரன், காட்டுச்சேரி செல்வ ராஜ் உள்ளிட்டோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

;