districts

img

கொள்ளிடம் அருகே சாலை மறியல்

சீர்காழி. டிச.2-   கொள்ளிடம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற சாலை மறியலை தொடர்ந்து 10 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த வடிகால் குழாய் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் கிராமத்தில் தொடர்ந்து பெய்த கன மழையினால் கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளிடத்தில் இருந்து  மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலை யில் நல்லூர் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து வடியாமல் இருந்தது. நல்லூர் சாலையை ஒட்டி உள்ள குளத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற வழி இல்லாமல் சாலைக்கு கீழ் இருந்த குழாய்  கடந்த பத்து வருடங்களாக அடைக்கப் பட்டு இருந்ததால் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நல்லூர்மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்க ளைச் சேர்ந்த பொதுமக்கள் வாகன  ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

கொள்ளிடத்திலிருந்து ஆச்சாள்புரம், நல்லூர், ஆரப்பள்ளம், மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துறை ஆகிய கிராமங்க ளுக்கு செல்பவர்களும் சாலையின் குறுக்கே தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவதி அடைந்தனர்.இந்நிலையில் அப்பகு தியில் தொடர்ந்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக சாலைக்கு கீழ் அடைக்கப்பட்டிருந்த குழாய் அடைப்பை நீக்கி தண்ணீர் வெளியேறி செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப் பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில்  நல்லூர்பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே .கேசவன் தலை மையில் நடைபெற்றது. சாலைமறியல்  போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை  மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீ.ஸ்டாலின், ஏ.வி. சிங்காரவேலன்,  எஸ்.துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் எல்.சுந்தரலிங்கம், சீர்காழி ஒன்றிய செயலாளர் கே.அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாவட்ட தலைவர் எஸ்.இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி , கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை யின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

சீர்காழி மண்டல துணைதாசில்தார் விஜயராணி, கொள்ளிடம் பிடிஓ அன்பரசு, கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அதைத் தொடர்ந்து அதிகாரிகள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையின் அடியில் பத்து வருடங்களாக அடைபட்டு கிடந்த குழாய் அடைப்பை சரி செய்து மழை நீரை  வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

;