திருச்சிராப்பள்ளி, டிச.21- பாக்ஸான் தொழிலாளர் போராட் டத்தில் பெண் தொழிலாளர்களிடம் அராஜகமாக நடந்துகொண்ட செங்கல் பட்டு காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை தட்டி கேட்டதற்காக சிஐடியு மாநில செயலாளர் முத்து குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத் ்ததை கண்டித்தும். பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். கைது செய்த வர்களை விடுதலை செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களிடம் அராஜ கம் செய்த செங்கல்பட்டு காவல் கண்கா ணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு சார்பில் செவ்வாய்க் கிழமை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித் தார். மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கண்டன உரையாற்றி னார். இதில் நிர்வாகிகள் சீனிவாசன், மணிமாறன், கட்டுமான சங்க சந்திர சேகர், ஆட்டோ சங்க மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் இந்திய தொழிற் சங்க மையம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஜீவபாரதி, சாலை போக்குவரத்து சம்மேளன மாநில துணை செயலா ளர் பார்த்தசாரதி, நகர ஆட்டோ தொழி லாளர் சங்க செயலாளர் கார்த்திகேயன், கவுரவத் தலைவர் செந்தில்குமார், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொருளாளர் வெங்கடாசலம், ஓய்வூதி யர் சங்க பொறுப்பாளர்கள் பழ.அன்பு மணி, ஜி.கண்ணன் உட்பட இந்திய தொழிற்சங்க மையத்தின் கும்பகோ ணம் பகுதி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.