குடவாசல், டிச.16 - ‘மக்களை தேடி முதல்வர்’ நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் குடவாசல் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலை மையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். பின்னர் அமைச்சர் சக்கரபாணி பொதுமக்களி டமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி யில் விவசாய நலத் திட்டத்தில் 10 பேருக்கும், முதியோர் உதவித்தொகை பயனாளிகள் 11 பேருக்கும், பட்டா மாறு தல் சான்றிதழ் 5 பேருக்கும் வழங்கப்பட்டது. வேளாண் துறை உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் வழிகாட்டுத லின்படி அமைக்கப்பட்ட வேளாண் பொருட்கள் கண்காட் சியை அமைச்சர் பார்வையிட்டார்.