கரூர், ஆக.17-
கரூர் புகழூர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புகழூர் கிளை சார்பில் நடைபெற்ற புத்தக வாசிப்பு முகாமிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை வகித்தார். நிகழ்ச் சியில் புகளூர் கிளைத்தலை வர் பாஸ்கர் பங்கேற்று, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார். மாவட் டக் குழுவின் பொன்.ஜெய ராம் அனைத்து மாண வர்களுக்கும் எங்கள் தேசம் என்கின்ற புத்தகத்தையும், தேசத்தலைவர்களின் முக மூடிகளையும் வழங்கி முகாமை தொடக்கி வைத் தார். கரூர் மாவட்டச் செய லாளர் ஜான்பாட்ஷா கலந்து கொண்டு அறிவியல் இயக்க மாநாடுகள் குறித்துப் பேசி னார். ஏற்பாடுகளை வான வில் மன்ற நிர்வாகிகள் சர வணன், புஷ்பநாதன், தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.