districts

img

வாலிபர் சங்கத்தின் ரத்த தான முகாம்

தஞ்சாவூர், டிச.13 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றிய ரத்ததான கழகத்தின் சார்பாக திருவையாறு சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பி.கிரண்குமார் தலைமை வகித்தார்.  முகாமை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஆர்.பிரதீப் துவங்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீதேவி, மரு.அருணீஸ்வர், ரத்த வங்கி ஆலோசகர் ஜே.புனிதா உள்ளிட்டோர் கொண்ட  மருத்துவக் குழுவினர். கொடையாளர்களிடமிருந்து தானமாக பெறப்பட்ட 51 யூனிட் ரத்தத்தை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கிக்கு எடுத்து சென்றனர்.

;