districts

img

எர்ணாகுளம் விரைவு ரயிலின் அடிபாகத்தில் சிக்கியிருந்த பைக் டயர்

தஞ்சாவூர், ஜூலை 7-

     தஞ்சாவூருக்கு வந்த எர்ணாகுளம் விரைவு ரயிலின் அடிபாகத்தில், பைக் டயர் ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

   கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயில் வழக்கம் போல், வியாழக்கிழமை இரவு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தது.

    அப்போது, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில், ரயில் வருவதற்கு முன்பாக எஸ்.10 கோச்சில், ஏதோ பொருள் ஒன்று சிக்கி இருப்பது போல பயணிகள் உணர்ந்துள்ளனர். இருப்பினும் வழக்கம் போல காலை 9:35 மணிக்கு ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தது.

    இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் சோதனை நடத்தி, கழிவுநீர் வெளியேறும் குழாயில் சிக்கியிருந்த பைக் டயரை அகற்றினர். மேலும் டயரால் இன்ஜின் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். ஆனால் பாதிப்பு எதுவும் இல்லை. பின்னர் சிறிது நேரத்தில், ரயில் புறப்பட்டு சென்றது.

   இதுகுறித்து, ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ரயிலில் டயர் சிக்கியதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என்பதால் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.