அரியலூர், நவ. 9- அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் மாசற்ற தீபாவளி விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி துவக்கி வைத்துப் பேசி னார். முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.