districts

img

ஏவிசி கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை, மார்ச் 29- மயிலாடுதுறை அருகே உள்ள மன்னன்பந்தல் ஏவிசி  தன்னாட்சி கல்லூரியின் ஆண்டு விழா வேலாயுதம் அரங்கில் நடைபெற்றது.  விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாக ராஜன் தலைமை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே.வெங்கடராமன் பல்வேறு தேர்வுகள், போட்டிகளில் வெற்றி பெற்ற, என்.எஸ்.எஸ், என்சிசி-யில் சிறப்பாக சேவையாற்றிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.  இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.மயில்வாக னன், துணை முதல்வர் எம்.மதிவாணன், ஏவிசி பொறி யியல் கல்லூரி இயக்குநர்கள், முதல்வர்கள், பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.