கரூர் மாவட்டம் மண்மங்கலம் மற்றும் கடவூர் பகுதிகளில் ரூ.3.82 மதிப்பீட்டிலான கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, குத்து விளக்கு ஏற்றினார். மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ ஆர். இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.