நன்னிலம், டிச.7 - நன்னிலம் அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் வரத.வசந்தபாலன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு, எஸ்.எம். சலாவுதீன், ஒன்றிய செயலாளர் பி.ஜெய சீலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட குழு உறுப்பினர் சரவண.சதீஷ்குமார், பொருளாளர் எஸ்.சுரேந்தர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாலிபர்கள், அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டினால் தேவையான அடிப்படை வசதிகூட இல்லா மல் உள்ளது என கண்டன முழக்கமிட்டனர்.