districts

img

பெயர்ந்து வரும் புதிய சாலை

கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலை மகாமகத்திற்கு முன்பு போடப்பட்டது. தற்போது இச்சாலை புதிதாக போடப்படுகிறது. பாபநாசத்தில் புதிதாக போடப்பட்ட சாலையின் சில இடங்கள் பெயர்ந்து வருகின்றன. வழுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பேட்ச் ஒர்க் போட்ட சாலையும் பெயர்ந்து விட்டது. தற்போது போடப்படும் சாலையாவது தரமாகப் போடப்படுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.