districts

img

பேட்டையில் மூடி கிடக்கும் கூட்டுறவு நூற்பாலையை திறக்க வேண்டும்

சிஐடியு நெல்லை மாவட்ட மாநாடு வலியுறுத்தல் திருநெல்வேலி, செப்.25- சிஐடியு நெல்லை மாவட்ட 13 வது மாநாடு உடையார்  பட்டி வானவில் திருமண  மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  தோழர் எஸ்.கே.பழனிச் சாமி நினைவரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் மாவட்ட துணை தலைவர் முத்துகிருஷ்ணன் கொடி யேற்றி வைத்தார். மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செண்ப கம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் பி.எஸ்.என்.எல்.செல்வராஜ் வரவேற்று பேசி னார். மாநில துணைத்தலை வர் ஆறுமுக நயினார் துவக்கி வைத்து பேசினார்.  வேலை ஸ்தாபன அறிக்  கைகளை மாவட்டச் செய லாளர் ஆர்.மோகன் சமர்ப் பித்தார். வரவு-செலவு அறிக்  கைகளை மாவட்டப் பொரு ளாளர் எஸ்.பெருமாள் சமர்ப்  பித்தார். வி.ச மாவட்டச்  செயலாளர் மாயகிருஷ் ணன், வி.தொ.ச மாவட்டச்  செயலாளர் அருணாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.  மாநாட்டில், மாவட்டத் தலைவராக ம.பீர் முகம்மது ஷா, மாவட்டச் செயலாள ராக ஆர்.முருகன், பொருளா ளராக  என்.ராஜன் மற்றும் 6  துணைத் தலைவர்கள், 6 இணைச் செயலாளர்கள் உட்பட 50 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், பேட்டை யில் மூடி கிடக்கும் கூட்டுறவு நூற்பாலையை திறக்க  வேண்டும், கங்கைகொண் டான் சிப்காட் மற்றும் நாங்கு நேரி பூங்காவில் மாநில அர சால் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

எனவே,  அதன்படி அதில் புதிய தொழிற்  சாலைகளை  உடனடியாக அமைத்து திறக்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், சாலை போக்கு வரத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக  அரசு பாதுகாக்க வேண்டும், போக்குவரத்து துறையில் இருக்கும் காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும், சாலையோர நபர்களுக்கு  தொழில் பாதுகாப்பு வழங் கிட வேண்டும், நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தமிழகம் முழுவதும் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில்  பணி யாற்றும் நகை மதிப்பீட்டா ளர்களை நிபந்தனை இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்  டும், மின்சாரத் துறையை பொது துறையாக நீடிக்க வேண்டும், நெல்லை மாவட்  டத்தில் போலி பீடி தயாரிப்பா ளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பீடி தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;