districts

img

இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை, டிச.20 -  மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூரில் உள்ள நான்கு வழிச்சாலை பணி ஒப்பந்த நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செவ்வாய்க்கிழமை முதல் நடத்துகிறது. சட்டவிதிகளை மீறி, சுற்றுச் சூழல் ஆணையத்தை ஏமாற்றி, விவசா யிகளை மிரட்டி விளைநிலங்களை அப கரித்து விழுப்புரம் முதல் நாகப்பட்டி னம் வரை 179 கி.மீட்டர் தொலைவுக்கு ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் துவங்கப் பட்ட பணிக்கு தற்போது கூடுதலாக 2  ஆயிரத்து 500 கோடி ரூபாயை அதிகப் படுத்தியுள்ளனர். (ஒரு கிலோ மீட்ட ருக்கு ரூ.40 கோடி)  சொற்ப விலைக்கு வாங்கிய  விவசாய நிலங்களை அழித்து, அப்பாவி  ஏழைகளின் குடியிருப்புகளை மிரட்டி அகற்றிவிட்டு அவ்வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு அடிப் படை வேலைகள் கடந்த 2017-ல்  துவங்கின. விவசாயிகளின் எதிர்ப்பை யும் மீறி அவர்களை ஏமாற்றி, சாலை அமைக்கும் வேலைகள்  வேகமாய் நடந்து வருகிறது.

ஒப்பந்த நிறுவனத்திற்கு  அரசு அதிகாரிகள் ஆதரவு

நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக விவசாயிகளை மிகவும் கேவலமாக நகாய் அதிகாரிகள் நடத்துவதாக ஆரம் பம் முதலே விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள் ளாத அரசு அதிகாரிகள் ஒப்பந்த நிறு வனத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் ஆணையத்தை ஏமாற்றி, சட்ட விதிகளை காற்றில் பறக்க விட்டு விழுப்புரம் முதல் புதுச்சேரி, புதுச் சேரி முதல் பூண்டியாக்குப்பம், பூண்டி யாக்குப்பம் முதல் சட்டநாதப்புரம், சட்ட நாதப்புரம் முதல் நாகப்பட்டினம் என  நான்கு பகுதியாக பிரித்து சட்ட விரோத மாக பணிகளை செய்ய துவங்கியது.

இதில் கொள்ளிடம் முதல் நாகப்பட்டி னம் வரையிலான என்.ஹெச் 45ஏ (NH 45A) சாலை பணிக்கு விவசாயிகளிடம் உள்ள விவசாய நிலங்களை மிரட்டி வாங்கி யது.  குறிப்பாக கொள்ளிடம், சட்டநாத புரம், கோபாலசமுத்திரம், புத்தூர், எருக் கூர், விளந்திடசமுத்திரம், தடாளன்கோ வில் பகுதி, செங்கமேடு, காத்திருப்பு, நாங்கூர், செம்பதனிருப்பு, அல்லிவிளா கம், இராதாநல்லூர், ஆலங்காடு, சங்கி ருப்பு, பூந்தாழை, மாமாகுடி, ஆக்கூர்,  பண்டாரவடை, ஸ்ரீநகர், நடராஜன் பிள்ளைசாவடி, அன்னப்பன்பேட்டை, திருக்கடையூர், சிங்கானோடை, காழி யப்பநல்லூர், அனந்தமங்கலம், பொறை யார் வழியாக அமைக்கப்படவுள்ள நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதியில் மட்டும் பல லட்சம் ஏக்கர் நிலங்களை அரசு விவசாயிகளிடமிருந்து மிரட்டியும்,  வலுக் கட்டாயமாகவும் கையகப்படுத்தி யது.  ஆரம்பக் கட்டத்தில் இச்சாலைக் காக எதிர்ப்பு தெரிவித்த பல விவசாயி கள் அரசின் அடக்குமுறை, மிரட்டல் போக்கால் வேறு வழியின்றி தங்களது வாழ்வாதாரமாக இருக்கும் விளை நிலங்களை அரசிடம் விருப்பமின்றி ஒப்படைத்தனர். இடையிடையே நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த நான்கு வழிச்சாலை  பணிகள், வேறு ஒரு ஒப்பந்த நிறுவ னத்திற்கு மாற்றப்பட்டு, மீண்டும் துவங் கப்பட்டது.

மிக சொற்பமான  தொகையை ஏற்க முடியாது

இப்பணிகள் கடந்த 8 மாதங்களாக மிக துரிதமாக நடைபெறும் நிலை யில், சட்டநாதபுரம் முதல் நாகை வரை யிலான 56 கி.மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பகுதியில் 2 ஆயிரத்து 500-க்கும்  மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப் பட வேண்டிய நிலங்களுக்கான இழப்பீடு களை மிக சொற்பமாக வழங்கியுள்ளது. சதுர அடி 800 ரூபாயிலிருந்து 1000 வரை விற்பனையாகும் சூழலில், வெறும்  3 ரூபாயிலிருந்து 11 வரை மட்டுமே வழங்கியுள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை பிடுங்கி விட்டு, மிக சொற்பமான சிறு தொகையை ஏற்க முடியாது என விவசா யிகள் எதிர்ப்பு தெரிவித்தும், கட்டுமான  ஒப்பந்த நிறுவனமும், நகாய் அமைப் பும் கொஞ்சமும் கண்டு கொள்ள வில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டிய அரசு அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனத் தின் குரலை வழிமொழியக் கூடிய வர்களாக இருக்கின்றனர்.  மேலும் சாலை அமைய வுள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு களுக்குரிய இழப்பீட்டையும் முறையாக வழங்காமல் அடாவடித்தனமாக இடித்து  வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயி கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையிலும், மேல்முறையீட்டையும் பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும்  பணியை மிக வேகமாக, நகாய் அதி காரிகளின் துணையோடு கட்டுமான நிறு வனம் செய்து வருகிறது. 

சாலை அமையவுள்ள வழியில் உள்ள கோயில்களை இடித்துவிட்டு வேறு கோவில் கட்ட முடியாது. மாற்று  வழியில் சாலையை அமைத்துக்  கொள்ளுங்கள் என்ற அறநிலை யத்துறையின் கோரிக்கையை பரிசீ லிக்கும் அதிகாரிகள், “குடியிருப்பு களை இடிக்காதீர்கள்; மாற்று வழியில் அமைத்துக் கொள்ளுங்கள்” என்ற ஏழைகளின் கோரிக்கையை ஏற்க மறுக் கின்றனர். விவசாயத்தை அழித்து, விவசாயி களை ஏமாற்றி, அடியாட்களை வைத்து மிரட்டி குடியிருப்புகளை இடித்துத் தள்ளுகிற நிறுவனத்தை கண்டித்தும், உடனடியாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டி குடி யிருப்புகளை இடிப்பதை கண்டித்து கடந்த ஜூன் மாதம் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டச்  செயலாளர் பி.சீனிவாசன் தலைமை யில் போராட்டம் நடைபெற்றது. கடலோர மக்கள் நலவாழ்வு சங்கத் தின் மாநில அமைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, பாதிக்கப்பட்ட விவசாய நில உரிமையாளர் கூட்டமைப்பு பொறுப் பாளர்கள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று ஒப்பந்த நிறுவன அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, மாவட்ட வரு வாய் அலுவலர் முருகதாஸ் உள்ளிட்ட  அதிகாரிகளுடன்  நடத்திய பேச்சு வார்த்தையில், ‘விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை வழங்கிய பிறகே சாலை பணிகளை தொடர அனுமதிப்பது’ என்று மாவட்ட  ஆட்சியருடன் ஆலோசித்து முடிவெடுப் பதாக  உறுதியளித்தும், இதுவரை முறை யான இழப்பீட்டினை வழங்காமல் காலங்காலமாக கோயில் இடங்களில் குடியிருக்கும் ஏழைகளை வலு கட்டாய மாகவும், அடியாட்களை வைத்து அகற்றிவிடவும் தொடர்ந்து முயற்சித்து வருவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மும், மார்க்சிஸ்ட் கட்சியும் பல்வேறு போராட்டங்களின் மூலம் தடுத்து வரு கின்றனர். 

எங்கே வசிப்பது? உணவுக்கு என்ன செய்வது? 

விவசாயிகள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை அலட்சியப்படுத்தும் விதமாக இழப்பீட்டு தொகையை கோ யில் நிர்வாகத்துக்கு அளித்துள்ளனர். வீடுகளையும், வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களையும் சாலைப் பணிக்காக ஒப்படைத்து விட்டு எங்கே  வசிப்பது? உணவுக்கு என்ன செய்வது? என்று கடும் மன உளைச்சலில் உள்ள னர்.  இந்நிலையில், திருக்கடையூர் அருகேயுள்ள டி.மணல்மேடு பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை பணி ஒப்பந்த  நிறுவன அலுவலகத்தை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் பாதிக்கப் பட்ட விவசாயிகள், குடிசைகளை இழந்த  மற்றும் இழப்பீடு கேட்டு தொடர்ந்து போராடி வருகிற ஏழை, எளிய மக்கள்  முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.  உரிய இழப்பீடு தரும் வரை போராட் டங்களை நடத்த உள்ள நிலையில்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயி லாடுதுறை மாவட்ட தலைவர் டி.சிம்சன் கூறுகையில், சட்டநாதபுரத்திலிருந்து காட்டுச்சேரி அருகேயுள்ள தேவானூர் பகுதி வரை (30 கிலோமீட்டர் தொலைவு) மட்டும் 500- க்கும் மேற்பட்ட விவசாயி களுக்கு உரிய இழப்பீடு தொகையினை  ஒப்பந்த நிறுவனம் இதுவரை  வழங்க வில்லை. பெரும்பாலன நிலங்கள் கோயில் களின் பெயரில் உள்ளது. காலங்கால மாக அந்த இடங்களில் விவசாயம் செய்த, குடியிருப்புகளில் வசிக்கும் மக்க ளுக்கு இழப்பீடு வழங்காமல் கோயில்  நிர்வாகங்களிடம் வழங்கி இருக்கின்ற னர். நிலத்தையும் பிடுங்கி, வீடுகளை யும் இடித்து தரைமட்டமாக்கியும் சாலை யாக்கி விடலாம். ஆனால் அந்த மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? என்பதை அரசு அதிகாரிகளும், காவல் துறையும் கொஞ்சமும் யோசிக்காமல் அடாவடியாக ஒப்பந்த நிறுவனத்துக்கு அடியாள் வேலையை பார்க்கின்றனர். சட்ட மீறல்களுக்கும் துணை நிற்கின்ற னர். எனவேதான் நாங்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட வுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

;