districts

img

வாய்க்கால் தலைப்பு ஷட்டர் பழுது 450 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் நாசம்

மயிலாடுதுறை, டிச.1- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம், விளாகம் ஊராட்சி மற்றும்  அதை சுற்றியுள்ள கிராமங் களில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் மழை வெள்ளநீர் புகுந்ததால்  விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.   விளாகம் ஊராட்சியில் 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவ சாயிகள் சம்பா சாகுபடி செய் துள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் ஏற்கெனவே இரண்டு முறை  மூழ்கிய பயிர்கள், கடந்த 5  நாட்களாக பெய்யும் தொடர் மழையால் மூன்றாவது முறையாக மீண்டும் நீரில் மூழ்கியுள்ளன. மங்கை நல்லூருக்கு கிழக்கே சுமார் 40 சதுர கிலோமீட்டருக்கான தண்ணீர் இந்த கிராமத்தின் வழியாகவே வடிகிறது.  இப்பகுதியின் முக்கிய மான வடிகாலான நண்ட லாறு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே கோட்டத்தில் இருந்தது. தற்போது நண்ட லாற்றின் வலதுக்கரை தஞ்சா வூர் வடிநில கோட்டத்தின் பராமரிப்பிலும், இடதுகரை மயிலாடுதுறை கோட்டத்தின் பராமரிப்பிலும் உள்ளதால் நண்டலாற்றை இந்த இரண்டு வடிநில கோட்டங்களும் கவனிக்காமல் உள்ளன.  இதனால் கரைகள் வலுவி ழந்து காணப்படுகிறது.

மேலும் கடந்த 4 ஆண்டு களாக தூர்வாரப்படாததும், நண்டலாற்று பிரிவு வாய்க்கா லான கோனேரிராஜன் வாய்க்காலின் தலைப்பு ஷட்டர் பராமரிப்பின்மை கார ணமாக பழுதடைந்துள்ளதா லும், அதன் வழியாக கிராமத்துக்குள் மழை வெள்ளநீர் நுழைந்து பயிர் களை ஒட்டு மொத்தமாக மூழ்கடித்துள்ளது.  இதுகுறித்து பாதிக்கப் பட்ட விவசாயிகளான கவி முருகன், சுந்தரபாண்டியன் கூறுகையில், மழை நின்று தண்ணீர் வடிந்தாலும் பயிர் களை இனி காப்பாற்றவே முடியாத நிலையில் உள்ளது. ஏற்கனவே இருமுறை அழுகி  போனப் பயிர்களில் சில மீண்டும் உயிர்பெற்றது. பெரும்பாலான பயிர்கள் முற்றிலும் நாசமானதால் மறுநடவு செய்திருந்தோம். அவையும் தற்போது அழுகி விட்டன. இதனால் கடுமை யான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயி ரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  பொதுப் பணித்துறை யினர் உடனடியாக நண்ட லாறு கரைகளை பலப்படுத்து வதோடு, கிளை வாய்க்கால்  தலைப்பு மதகு ஷட்டர்களை  பழுதுநீக்கி, தூர்வாரும் பணி களையும் மேற்கொண்டால் தான் இனிவரும் காலங்களில் விவசாயத்தையும், விவசாயி களையும் பாதுகாக்க முடியு மென அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

;