கும்பகோணம், ஜூலை 4-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சி யார்கோவில் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட சமர்த்த னார்குடி பெரியகுளம் அருகில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, நாச்சியார் கோவில் காவல் ஆய்வாளர் ரேகாராணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சீனிவாசநல்லூர் கவு தம்(18), சமர்த்தனார்குடி கிஷோர் (19), திருப்பூந்துறை கிறிஸ்டோபர் (19) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களி டம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1.100 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.