சாலை அமைக்கும் பணி துவக்கம்
தஞ்சாவூர், பிப்.27 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், ஓட்டங்காடு ஊராட்சி, பெரிய தெற்குக் காடு முதல் மேல ஓட்டங் காடு வரை இணைப்புச் சாலை, ஓரடுக்கு கப்பிச் சாலையாக அமைக்கும் பணி ரூ.30 லட்சம் மதிப் பீட்டில் நடைபெறுகிறது. இதற்கான பணியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் செல்வேந்திரன், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூர், பிப்.27 - இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூர் நீதி மன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண் டனை விதித்தது. ஆந்திர மாநிலத்தி லிருந்து திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டை வழியாக பைபர் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் முயற்சி செய்வதாக நாகை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையினர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை கிழக்கு பாமணி ஆற்றங்கரையில் 2023 ஜூன் 6 ஆம் தேதி சோதனை மேற்கொண்ட னர். அப்போது, 10 சாக்கு களில் 135 பொட்டலங்க ளில் 296.5 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றைக் கைப்பற்றிய காவல் துறையினர், இது தொ டர்பாக முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கே. முருகானந்தம் (45), மகேந் திரன் (32), சசிகுமார் (23) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து தஞ்சா வூர் இன்றியமையா பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட் டக் கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்த ராஜன் விசாரித்து, முரு கானந்தம், மகேந்தி ரன், சசிகுமார் ஆகியோ ருக்கு தலா 20 ஆண்டு கள் சிறை தண்டனையும், தலா ரூ. 2 லட்சம் அபராத மும் விதித்து புதன் கிழமை தீர்ப்பளித்தார்.
மலையடிவார பகுதிகளில் காட்டு தீ
நத்தம், பிப்.27- திண்டுக்கல் மாவட் டம் நத்தம் அருகே காட்டு வேலம்பட்டி பகுதியில் உள்ளது கரந்தமலை தொ டர்ச்சி உள்ளது. இந்த மலை அடிவார பகுதி களில் விவசாயிகள் மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட மரங்கள் விவ சாயம் செய்து வரு கின்றனர். இந்நிலையில் இந்த மலைஅடி வார பகுதியில் புதனன்று மதியம் திடீ ரென காட்டுத் தீ பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் நத்தம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். அப்பகுதியில் இருந்த செடி, கொடிகள் தீயில் கருகின.
16 கிராமங்களில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் தொடக்கம்
அரியலூர், பிப்.27- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்தில் பெரு நிறு வனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் சுமார் ரூ.6 கோடியில், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் துவக்க விழா நடை பெற்றது. இத்திட்டத்தை தேசிய வேளாண் நிறு வனம் செயல்படுத்துகிறது. திட்டத்தினை செயல்படுத்துவதற்கான நிதியினை எச்டிஎப்சி என்ற தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. இவ்விழாவில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்து திட்டத்தினை விவசாயிகள்-பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். தேசிய வேளாண் நிறுவனத்தின் முதுநிலை திட்ட இயக்குநர் மகேஸ்வரன் பேசினார். இந்த திட்டம் 3 ஆண்டுகளில் 16 கிரா மங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங் களை மேம்படுத்துதல், சூரிய ஆற்றல், தெரு விளக்குகள் அமைத்தல், நீர்நிலைகள் மற்றும் வரத்து கால்வாய்கள் தூர்வாருதல், விவசாய நிலங்களை மேம்படுத்துதல், விவ சாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்தல், சுற்றுச்சூழல் மேம்படுத்தும் பொருட்டு மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற பணிகளை செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
புதுக்கோட்டை, பிப்.27 - வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்ட மசோதாவை கொண்டு வரத் திட்டமிடும் ஒன்றிய அரசைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களை, புதுக்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வி.டி.சின்னராஜு தலைமையில் வழக்குரைஞர்கள் புறக்கணித்தனர். மேலும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், ஆலங்குடி, கறம்பக்குடி, மணமேல்குடி, இலுப்பூர், விராலிமலை ஆகிய நீதிமன்றங்களிலும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 860 வழக்குரைஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வரத் திட்டமிட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள வழக்குரைஞர்களுக்கு விரோதமான சட்ட மசோதாவை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் செலுத்தும் நீதிமன்ற முத்திரைத்தாள் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கும் முகாம்
கும்பகோணம், பிப்.27- கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் முகாம் பிப்.28 (வெள்ளி) அன்று நடை பெறுகிறது. இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளி மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், “வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். சர்ச் வளாகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு மருத்துவ சான்று வழங்கும் சிறப்பு முகாம் அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளால் நடத்தப்பட உள்ளது. மேலும் அதில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வாங்காதவர்களுக்கும், UDID கார்டு வாங்காதவர்களுக்கும், முக்கியமாக நலவாரியம் பதியாதவர்களுக்கும் தேவையானவை செய்துத் தரப்பட வுள்ளன. இதுவரை எந்த சான்றும் பெறாத மாற்றுத்திறனா ளிகள், உரிய ஆவணங்களுடன் இந்த முகாமிற்கு வந்து பயன்பெற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விதைப் பண்ணையில் விபத்து பலியானவர் குடும்பத்திற்கு நிதியுதவி
புதுக்கோட்டை, பிப்.27 - புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வெள்ளாளவிடுதி வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள அரசு விதைப் பண்ணையில், சங்கம்விடுதி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலலிதா (40) கடந்த பிப்.21 அன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உளுந்து அடிக்கும் இயந்திரத்தில் சேலை சுற்றியதில், தலையில் படுகாயம் ஏற்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பிப்.26 அன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் குடும்பத்தி னருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்க லையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வக்ப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
அரியலூர், பிப்.27 - வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மாநில பொறுப்பு குழு உறுப்பினர் சபியுல்லா வரவேற்றார். மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தஸ்தகீர், மாநில பொறுப்புக் குழு உறுப்பி னர்கள் பர்கத், முகமதுஆசிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சி தலைமை கழக பேச்சாளர் பிஸ்மில்லா கான், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோ வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், வெங்கடாஜலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார், திமுக நகர செயலாளர் கருணாநிதி உள்ளிட் டோர், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ப் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மறியல் போராட்ட வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜர்
தஞ்சாவூர், பிப்.27- ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடுக்கப் பட்ட வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆஜராகினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் 2017 டிச.27 அன்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், கும்ப கோணம் துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் தஞ்சாவூரிலுள்ள நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி எஸ்.சுசீலா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் அமைச்சர் கோவி.செழியன், கல்யாணசுந்தரம், அன்பழகன், தமிழ ழகன் உள்ளிட்டோர் ஆஜராகினர். பின்னர், இந்த வழக்கு விசாரணை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பிரச்சனை ஏற்படுத்துவது போல் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவோர் மீது நடவடிக்கை
கும்பகோணம், பிப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சில தினங் களுக்கு முன்பு நடைபெற்ற பாமக மாநாட்டின் போது விடு தலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை சில நபர்கள் சேதப்படுத்தியதாக ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்து வது போல், சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பதிவிட்ட திருவள்ளூரைச் சேர்ந்த கார்த்தி என்ற நபரை கும்பகோணம் தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அதற்கு ஆபாசமாகவும், வன்முறையை தூண்டும் நோக்கிலும் comments பதிவிட்டும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகை யில் நடந்து கொள்ளும் நபர்களை கும்பகோணம் காவல் துறையினர் குழு அமைத்து கண்காணித்து வருகின்ற னர். மேலும், கட்சி கொடியை சேதப்படுத்திய நபர்கள் மற்றும் அதன் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் படும் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பாக தெரி விக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு
கும்பகோணம், பிப்.27 - ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குருவை, சம்பா, தாளடி என முப்போக நெல்சாகுபடி செய்யப்படு வது வழக்கம். இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டு அறு வடை செய்யப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்படு கிறது. இதில் கிடைக்கும் அரிசி, பொதுவிநியோக திட்டத் தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படு கிறது. அதன்படி கும்பகோணத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி கும்பகோணம் மற்றும் திருவிடை மருதூர் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் 118 லாரிகளில் கும்பகோ ணம் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலின் 58 வேகன்களில் அடுக்கி வைக்கப்பட்டு அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மயிலாடுதுறையில் 33,206 மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்
மயிலாடுதுறை, பிப்.27- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு, மேல்நிலை இரண்டா மாண்டு பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “மேல்நிலை இரண்டா மாண்டு மாணவர்களுக்கு மார்ச் 3 ஆம் தேதி யும், மேல்நிலை முதலாமாண்டு மாணவர் களுக்கு மார்ச் 5 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28 ஆம் தேதி யும் பொதுத் தேர்வு தொடங்கவுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பில் மொத்தம் 12,386 மாணாக்கர்களும், 11 ஆம் வகுப்பில் மொத்தம் 10,588 மாணாக்கர்களும், 12 ஆம் வகுப்பில் மொத்தம் 10,232 மாணாக்கர்களும் என மொத்தம் 33,206 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக மேல்நிலை இரண் டாமாண்டு, மேல்நிலை முதலாமாண்டு வகுப்புகளுக்கு 39 தேர்வு மையங்களும், பத்தாம் வகுப்பு 52 தேர்வு மையங்களும் அமைக்கப் பெற்றுள்ளன. மேல்நிலை இரண்டாமாண்டு, மேல் நிலை முதலாமாண்டு தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 801 ஆசிரி யர்களும், பத்தாம் வகுப்பிற்கு 639 ஆசிரி யர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்க பத்தாம் வகுப்பிற்கு 61 பறக்கும் படைகளும், மேல் நிலை இரண்டாமாண்டு, மேல்நிலை முதலா மாண்டு தேர்விற்கு 67 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் மயிலாடுதுறை கூறை நாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் சீர்காழி எஸ்ஆர் மேல்நிலைப் பள்ளி யும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையமாக அமைக்கப்பட்டுள்ளன.
தொழிற்சங்கத்தோடு பெரம்பலூர் நகராட்சி பேச்சுவார்த்தை நடத்த சிஐடியு கோரிக்கை
பெரம்பலூர், பிப்.27- பெரம்பலூர் மாவட்ட சிஐடியு சாலை யோர விற்பனையாளர்கள் மற்றும் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவை மாவட்டத் தலைவர் வரதராஜ் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் சங்கத்தின் சார்பில் இதுவரை நடைபெற்ற வேலைகள், எதிர்கால இயக்கங் கள் குறித்து பொதுச் செயலாளர் ரங்கராஜ் முன்மொழிந்தார். தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் பேசி னார். மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, ரங்க நாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மணி, குணசேகரன், லட்சுமணன், செல்லதுரை ஆகியோர்கலந்து கொண்டனர். கூட்டத்தில், சாலையோர வியாபாரி களின் பிரச்சனைகள் குறித்து பெரம்பலூர் நகராட்சியில் வெண்டிங் கமிட்டியை கூட்டி முடிவு எடுக்க வேண்டும். முன்னறிவிப்பு இல்லாமல் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பெரம்பலூர் நகரத்தில் திடீரென அமர்த்தப்படும் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். டாடா ஏசி வாகனத்தில் விற்கும் கடைகளை பெரம்ப லூர் நகராட்சியும், காவல்துறையும் அப்புறப் படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தோடு பெரம்பலூர் நகராட்சி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு மூன்று பேருந்துகள் மூலம் செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ஜகபர் அலி கொல்லப்பட்ட வழக்கு மனித உரிமை ஆணையம் தலையிட 55 அமைப்புகள் கடிதம்
புதுக்கோட்டை, பிப்.27 - மனித உரிமை காப்பாளராகச் செயல் பட்ட ஜகபர்அலி லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மாநிலம் முழுவதும் செயல் பட்டு வரும் 55 சூழலியல் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்த ஜகபர் அலி, கடந்த ஜன. 17 ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். திருமயம் பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத குவாரி கள் தொடர்பாக, தொடர்ந்து அவர் குரல் எழுப்பி வந்ததால் இந்தக் கொலை நடை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக குவாரி உரிமையாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து செயல்பட்டு வரும் 55 அமைப்பினர் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதி யுள்ளனர். மனித உரிமை காப்பாளர் கூட்ட மைப்பின் தேசியச் செயலர் வழக்குரைஞர் ஹென்றி திபேன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ரா ஜன் உள்ளிட்டோர் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஜகபர்அலி தொடர்ந்து கொடுத்த புகார் மனுக்கள் மீது ஆட்சியர்கள், காவல் கண்கா ணிப்பாளர்கள், கனிமவளத் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கை யையும் எடுக்கவில்லை. ஜகபர்அலி கொல்லப்பட்ட பிறகு, அவரது உடலை குளிர்பதனப் பெட்டிகூட இல்லாத திருமயம் அரசு மருத்துவமனை யில் வைத்திருந்துதான் உடற்கூறாய்வைச் செய்தனர். 20 கி.மீ தொலைவில் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை இருந்தும் இவ்வாறு நடந்திருக்கிறது. அதன்பிறகு, மனித உரிமைக் காப்பா ளர் கூட்டமைப்பின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப் பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், உடல் தோண்டி எடுக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மனித உரி மைகள் ஆணையம் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். இச்செயலைக் கண்டிக்க வேண்டும். காவல்துறையிடம் முதல் கட்ட விசாரணை அறிக்கை கோர வேண்டும். வழக்கின் சாட்சிகளைப் பாது காக்க உத்தரவிட வேண்டும். இறந்த ஜகபர்அலியின் குடும்பத்தின ருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்கவும், குடும்பத் தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.