புதுக்கோட்டை, டிச.13 - புதுக்கோட்ட மாவட்ட அளவி லான குழந்தைகள் அறிவியல் மாநாட்டி லிருந்து 16 பள்ளிகள் மாநில குழந்தை கள் அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் புஷ்கரம் வோளாண் அறிவியல் கல்லூரி யும் இணைந்து நடத்திய 29-வது தேசிய குழந்தைகள் மாநாடு வெள்ளிக்கி ழமை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்தது. அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ம.வீர முத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற் றார். கல்லூரி செயலாளர் எம்.ராஜாராம், சிவகாமி ரத்த தானக் கழகம் சா. மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித் தனர். இம்மாநாட்டில் கலந்து கொண்ட 126 ஆய்வுகளிலிருந்து 16 ஆய்வுக் கட்டுரை கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் ஆவ ணத்தான்கோட்டை நடுநிலைப்பள்ளி, மீனம்பட்டி நடுநிலைப்பள்ளி, அக்கச்சிப் பட்டி நடுநிலைப்பள்ளி, அண்ணாமலை யான் குடியிருப்பு நடுநிலைப்பள்ளி, ஒடப்பவிடுதி நடுநிலைப்பள்ளி, அசோக் நகர் நடுநிலைப்பள்ளி, பூங்குடி நடு நிலைப்பள்ளி, மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளி, நற்பவள செங்கமாரி அரசு உயர் நிலைப்பள்ளி, புல்வயல் அரசு உயர்நி லைப்பள்ளி, வடசேரிபட்டி அரசு மேல்நி லைப்பள்ளி, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி,
புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி, திருக்கோகர்ணம் ஏபிஜே துளிர் இல்லம், திருமயம் கல்பனா சாவ்லா துளிர் இல்லம் ஆகிய பள்ளிகள், துளிர் இல்லங்களைச் சேர்ந்த மாணவ, மாண விகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் மாணவ-மானவிகளுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி சான்றிதழ்கள், கேடயம், நினைவுப் பரிசு உள்ளிட்டவற்றை வழங்கிப் பாராட்டினார். தேர்வான 16 பள்ளிகளின் ஆய்வு அணியினரும், வழிகாட்டி ஆசிரியரோடு டிசம்பர் 28, 29 தேதிகளில் மேட்டுப்பாளையம் வனவி யல் கல்லூரியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான குழந்தைகள் அறிவி யல் மாநாட்டில் பங்குபெறுவர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. இராமதிலகம், அறிவியல் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் க.சதாசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் அ.மண வாளன், மாநில செயலாளர் எஸ்.டி.பால கிருஷ்ணன், நேரு இளையோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபா கர், முனைவர் இரா.இராஜ்குமார் ஆகி யோர் கருத்துரை வழங்கினர்.