districts

img

தசைநார் சிதைவு நோய்: குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது

தஞ்சாவூர், டிச. 13 -  தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு வெள்ளிக்கிழமை 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி, மருந்தை பெங்களூ ருவில் மருத்துவர்கள் செலுத்தினர்.   தஞ்சாவூர் சிராஜ்பூர் நகரைச் சேர்ந்த வர் ஜெகதீஸ் (32). ரெப்கோ வங்கியில்  உதவி மேலாளராக பணியாற்றி வரு கிறார். இவரது மனைவி எழிலரசியும் (32)  அதே வங்கியில், இளநிலை உதவியா ளராக உள்ளார்.  இவர்களின் 2 வயது மகள் பாரதிக்கு, முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோய் இருப்பது, கடந்த ஆக.9 ஆம் தேதி கண்டறியப்பட்டது. சிறுமி  தானாக எழுந்து நிற்க முடியாமல், தவித்த நிலையில், சிறுமியை பரிசோ தித்த மருத்துவர்கள் 16 கோடி ரூபாய்  மதிப்பிலான, “‘ZOLGENSMA’, என்ற  ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும். மருந்தின் விலையுடன் இறக்குமதி வரி,  ரூ.6 கோடி சேர்த்து, 22 கோடி ரூபாய் செல வாகும்” என தெரிவித்தனர். இதற்கான ரூ.6 கோடி வரியை ஒன்றிய அரசு ரத்து  செய்தது.   இதையடுத்து ஜெகதீஸ் - எழிலரசி தம்பதியினர், கடந்த ஆக.16 ஆம் தேதி  முதல் நண்பர்கள்,

உறவினர்கள், சமூக வலைதளங்களில் நிதி திரட்ட துவங்கி னர். இதையடுத்து பல்வேறு தன்னார்வலர்கள், அவர்களுக்கு உத வும் விதமாக நிதி திரட்ட ஆதரவு அளித்து  தேவையான நிதியை திரட்டி வழங்கி னர்.   தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர், தன்னார்வ லர்களை இணைத்து, மாவட்ட நிர்வா கம் பெயரில் புதிதாக வங்கி கணக்கை  துவக்கி, அதன் மூலம் சுமார் 45 லட்சம்  ரூபாயை நிதியாக திரட்டி வழங்கினார். இந்நிலையில், கடந்த நவ.19 ஆம்  தேதியுடன் 96 நாட்களில் சுமார் 16  கோடி ரூபாய் நிதியை திரட்டிய பெற் றோர், குழந்தையை பெங்களூரு அழைத்து சென்றனர். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை பெங்களூரு வில், மருத்துவர் ஆன் ஆக்னஸ் மேத்யூ  தலைமையிலான குழுவினர் குழந்தை பாரதிக்கு ஊசி மருந்தை செலுத்தினர்.   இதுகுறித்து ஜெகதீஸ் கூறுகை யில், எனது மகள் உயிரை காக்க  உதவிய நல் உள்ளம் படைத்த அனைவ ருக்கும் நன்றி. இதற்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கும், ஆட்சியருக் கும் நன்றி. ஊசியை செலுத்திய நிலை யில், தொடர்ந்து 4 நான்கு மாதம் வரை  கண்காணிப்பில் குழந்தையை வைத்து  கொள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தை நலமடைந்து வீடு திரும்புவார்  என மருத்துவர்கள் நம்பிக்கை தெரி வித்துள்ளனர்” என்றார்.

;