districts

திருச்சி முக்கிய செய்திகள்

வாகனம் கவிழ்ந்து  15 மாணவர்கள் காயம்

புதுக்கோட்டை, ஜூன்.20-  புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றின் வாகனம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கிராமங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றது. வாகனம் தொண்டைமான் ஊரணி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்துக்கான குழிக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களை அப்பகுதி மக்களும், பெற்றோர்களும் மீட்டு மழையூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். விபத்து குறித்து ஆதனக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு பரிசளிப்பு 

பாபநாசம்,ஜுன் 19-                   தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஆபிதீன்  பள்ளி சார்பில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  பேரூராட்சித் தலைவி பூங்குழலி, அதிக மதிப்பெண் கள் பெற்ற  பகிமாவிற்கு ரூ 10 ஆயிரம், நதி பாலனுக்கு ரூ.5 ஆயிரத்தை வழங்கினார். இதில் பள்ளித் தாளா ளர் காஜா முகையதீன், பள்ளி முதல்வர் லூர்து ஜான்சன்,  உதவி முதல்வர் செல்வி, சாப் ஜான் உட்பட ஆசிரி யர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

நலவாரியப் பதிவை நேரடியாக செய்க! ஜூலை 16-இல் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 19- சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட முறைசாரா சங்கங்க ளின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று வெண்மணி இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.  நலவாரியப் பதிவை நேரடியாக செய்ய வேண்டும். பணப் பயன்கள் கேட்பு மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப் பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16 அன்று திருச்சி மன்னார்புரம் சிக்னலில் இருந்து பேரணியாக சென்று, நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். தீர்மா னங்களை வழிமொழிந்து ஆட்டோ சங்க செயலாளர் மணிகண்டன், சாலை போக்குவரத்து சங்க செயலாளர் சந்திரன், கட்டுமான சங்க செயலாளர் சந்திரசேகர், தரைக்கடை சங்க செயலாளர் செல்வி, தையல் சங்க செயலாளர் பிரமிளா ஆகியோர் பேசினர்.

பிள்ளையார்பட்டியில்  உதவித்தொகையுடன்  கயிறு பொருட்கள் தயாரிக்க பயிற்சி  ஜூன் 28-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

தஞ்சாவூர், ஜூன்.19 -  ஒன்றிய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம், தஞ்சாவூர் அருகே வல்லம் வழி பிள்ளையார்பட்டியில் உள்ளது. இங்கு கயிறு பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  7 மாத கால கயிறு ஆர்டிசன் பயிற்சி வகுப்பில் 18 முதல் 50 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. உள் பயிற்சி 6 மாதங்கள் மற்றும் இன்டெர்ன்ஷிப் பயிற்சி 1 மாதம் என 7 மாதம் பயிற்சி அளிக்கப்படும்.  மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சிக்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.   பயிற்சியின் போது மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப் படும். பயிற்சி பெறுவர்களுக்கு விடுதி மற்றும் உணவு  வசதிஉண்டு.  இப்பயிற்சி  வரும் 01.07.2024  முதல் தொடங்கப்படும் . இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூல மாகவோ இலவசமாக கயிறு வாரியம் மூலமாக பெற்று கொள்ளலாம். அல்லது www.coirboard.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அலுவலக பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளை யார்பட்டி,  வல்லம் வழி, தஞ்சாவூர்-613403  என்ற முகவரிக்கு ஜூன் 28-க்குள் அனுப்ப  வேண்டும்.  மேலதிக விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04362-264655 ஐ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. 

 


 

;