districts

img

தேனி பாஜகவில் தொடரும் மல்லுக்கட்டு: 100 பேர் ராஜினாமா கடிதத்துடன் ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.10- தேனி மாவட்ட பாஜக  தலைவர் மற்றும் தலைமை யை கூண்டோடு மாற்றக்  கோரி 100-க்கும் மேற்பட்ட  பாஜகவினர் ராஜினாமா கடிதத்துடன் கட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நாடாளுமன் றத்திற்கு தொகுதி பொறுப் பாளராக மாநிலச் செயற் குழு உறுப்பினரும், மாவட்ட  ஊராட்சி துணைத் தலைவருமான ராஜபாண்டியனும், உதவி பொறுப்பாளராக திமுகவிலிருந்து வந்த ராமநாதனும் நியமிக்கப்பட்டனர்.  கட்டப்பஞ்சாயத்து, கமிஷன் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்கள், திமுகவிலிருந்து வந்த வர்களுக்கு பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகிகள் சுவரொட்டி ஓட்டினர். அந்த நியமனத்தை  ரத்து செய்ய வேண்டும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  ஆனால், தற்போது வரை நியமனம் செய்யப்  பட்ட தொகுதி பொறுப்பா ளர்கள் யாரும் மாற்றம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக 5 பொறுப்பா ளர்களை மாவட்டத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கினார். இந்நிலையில், கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக தேனி மாவட்டத் தலைவர்  பி.சி.பாண்டியன் செயல்படுவதாகவும், அதனால் மாவட்டத் தலைமையை கூண்டோடு மாற்றக் கோரி சனிக்கிழமையன்று அதிருப்தி பாஜகவினர் கட்சி அலுவலகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.