districts

img

நிலக்கோட்டை கண்மாயில்  செத்து மிதக்கும் மீன்கள்

 சின்னாளப்பட்டி செப்.9- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை,செம்பட்டி, ஆத்தூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது.  இதனால் அதிகமான தண்ணீர் ராஜ வாய்க்கால் வழி யாக, செங்கட்டான்பட்டி கண்மாய் வழியாக, நிலக் கோட்டை கொங்கர்குளம் கண்மாய்க்கு வரும் வாய்க் காலில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்த தால் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அந்த பகுதி மீன் வியாபாரிகள் கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து தகவலறிந்து, அங்கு சென்று இறந்த மீன்களை  வியாபாரத்திற்கு அள்ளி  செல்வதால்  சுகாதாரக்கேடு ஏற்படும் என்று மக்கள் அச்சம் தெரிவித்த னர். இதனையடுத்து நிலக்கோட்டை காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் இறந்த மீன்களை அப்பு றப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தனர். மேலும் கொங்கர்குள வரத்து வாய்க்கால் மற்றும் நீர்நிலைக ளுக்குள் அத்துமீறி யாரும் இறங்கினால் கரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

;