தருமபுரி, நவ. 27- அரூர் அண்ணாநகர் பகுதியில் குடியி ருக்கும் வீடுகளை வருவாய்த் துறை அதி காரிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக அண்ணாநகர் பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகாவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மோப்பிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில் 30 ஆண் டுகளுக்கு மேலாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகட்டி வசித்து வருகின் றனர்.
தங்களது குடியிருப்புக்கு பட்டா கோரி நடத்திய தொடர் போராட்டங்களின் கார ணமாக கடந்த 2007ஆம் ஆண்டில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ள குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி பட்டா வழங்கப்பட் டது. இந்நிலையில், சேலம் முதல் வாணியம் பாடி வரை ஆறு வழிச்சாலை விரிவாக்கப் பணி இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. அச் சாலையானது அண்ணாநகர் பகுதியில் குடி யிப்பு பகுதி வழியே செல்வதால், உங்க ளுக்கு கொடுத்த பட்டா போலியானவை.
அத னால் வீட்டுமனைகளை அனைவரும் காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அரூர் வட்டாட்சியரும், வரு வாய்த்துறை அதிகாரிகளும் மிரட்டி வருகின்றனர். எனவே, அரசால் வழங்கப்பட்ட இடத்தை அப்புறப்படுத்தாமல், குடியிருக் கும் பொதுமக்கள் வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அம்மனுவில் தெரி வித்துள்ளனர்.