districts

img

பொது இடத்தை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தருமபுரி, டிச.28-  பொது பயன்பாட்டிற்கு உண்டான இடத்தை மீட்டுத் தரக்கோரி கெளாப்பாறை கிராம மக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.  தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திற்க்குட்பட்ட கெளாப்பாறை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில் 300க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இக்கிராம மக்கள் பல ஆண்டாக பயனபடுத்தி வந்த ஏரிக்கரை புறம்போக்கு பட்டா சர்வே எண் 92/1, மற்றும் 85 /4க்கு உண்டான பொது இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதை மீட்டு தரக்கோரியும், கிராமத்திற்கு தேவையான அடிப் படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென வலியு றுத்தி மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு கொடுக்க திங்க ளன்று அக்கிராமமக்கள் திரளானோர் சென்றனர். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுக்கவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கோட் டாட்சியர் (பொறுப்பு) தணிகாச்சலம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து, மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் மேற்கணட கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.