districts

img

ஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பென்னாகரம், ஜன.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் ஒகே னக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிட ஆளும் அரசு நடவ டிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் ஒகேனக்கல் உபரி  நீரை நிரப்ப வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பென்னா கரத்தில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் பேசுகையில், தருமபுரி மாவட் டத்தில் பென்னாகரம், பாலக் கோடு, ஏரியூர் உள்ளிட்ட பகுதி களில் குடிநீர் பிரச்சனைகள் அதிக ளவில் நிலவி வருகின்றன.

மேலும், தருமபுரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வரும் நிலையில், தற்போது மாவட் டம் முழுவதும் நிலவும் கடும் வறட்சி யால் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டுள்ளனர். ஆகவே, ஒகேனக் கல், தென்பெண்ணை ஆறுகளின் உபரிநீரை ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதேபோல், பென்னாகரம் அருகே தொடங்கப்பட்ட சிட்கோ தொழிற்சாலை என்பது பெயர் அள வில் மட்டுமே உள்ளதால், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வேலைவாய்ப்பினை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை  ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இம்மா வட்ட இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதிசெய்யும் வகை யில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை போராடிப் பெற்றோம். ஆனால், தற்போதைய ஆட்சியில் கமிஷன் வழங்கினால் மட்டுமே நூறு நாள் வேலைத்திட்டம் கிராம பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. குடியரசு தினத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில், நூறு நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும், மத்திய அரசு கொண்டு  வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை யும் திரும்பப் பெறக்கோரியும் தீர்மா னம் நிறைவேற்றப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழக அரசானது கிராம சபை கூட் டத்தை நடத்த தடை விதித்துள்ளது.  

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தேர்தல் பிரச்சாரங்களின் போது மசூதிகள், தேவாலயங்கள் ஆகிய இடங்களில் ஆதரவுக்கோரி பிரச்சாரம் செய் கிறார். ஆனால், மத்திய அரசு கொண்டுள்ள குடியுரிமை சட்டம், முத்தலாக் உள்ளிட்ட சட்டங் களுக்கு ஆதரவாக அவரது கட்சி யினர் நாடாளுமன்றத்தில் வாக்க ளித்தனர்.  ரயில்வே, விமானம், பிஎஸ் என்எல் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறைகளை மத்திய அரசு தனியாருக்கு விற்று வருகிறது.

இதேபோல், அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பாமல் ஆளும்  அரசுகள் மெத்தனம் காட்டி வரு கிறது. இதுகுறித்தெல்லாம் கவலைப்படாத பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகி றார். அதேநேரம், தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினருக் கும் இடஒதுக்கீடு வழங்கு வதற்காக அனைத்து வகுப்பினரும் ஒன்றிணைத்து போராட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ஆனால், பாமக நிறுவனர் ராம தாசோ, குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார். ஆகவே, ராமதாஸ் இட ஒதுக் கீட்டுக்காக போராடுகிறாரா? அல்லது சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளுக்காக போராடுகி றாரா? என மக்கள் கேள்வி எழுப்பு கின்றனர். இவ்வாறு கே.பால கிருஷ்ணன் பேசினார். முன்னதாக, பென்னாகரம் அம் பேத்கர் சிலை அருகிலிருந்து துவங்கிய பேரணியானது பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நிறைவு  பெற்றது.

இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் குணசேகரன்,  மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம் பரிதி, அர்ஜூனன், விஸ்வநாதன், பகுதிக்குழு செயலாளர்கள் ஜி.சக்தி வேல், என்.பி.முருகன், ஆர்.சின்ன சாமி, அன்பு  மற்றும் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பென்னாகரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி குழுக்களின் சார்பில் பொது மக்களிடம் திரட்டப்பட்ட நிதி யினை கட்சி நிர்வாகிகள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனி டம் வழங்கினர்.

;