districts

img

தொடர் மழையால் பயிர்கள் பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி, டிச.12- தருமபுரியில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயப் பயிர் கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண் டும் என கோரிக்கைகள் எழுந்துள் ளன. நிவர் மற்றும் புரேவி புயல் கார ணமாக கடந்த மூன்று வாரமாக தரும புரி மாவட்ட எல்லைப் பகுதியான சிட் லிங், கோட்டப்பட்டி, தும்பல், கோம்பை, எஸ்.தாதம்பட்டி, நரிப் பள்ளி, பயர்நாய்க்கண்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால் அப் பகுதியில் உள்ள விவசாய நிலங் களில் மழைநீர் தேங்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, விவசாய நிலங்களில் நடவு செய்த நெற்பயிர்கள், கிழங்கு, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் தேங்கி அழிந்து வருகின்றன.  மேலும், மலைகளில் உற்பத்தி யாகி வருகின்ற மழை நீரால் கோட் டப்பட்டி, நரிப்பள்ளி வழியாக சாத்த னூர் அணைக்குச் செல்லும் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகின்றன. இவ்வெள்ளத் தால் விவசாய நிலம் பாதிக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகமும், அர சும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயி கள் வலியுறுத்தி உள்ளனர்.

;