districts

img

தக்காளி விவசாயிகள் பயன்பெற உரிய நடவடிக்கை தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி, நவ. 28- தக்காளி விவசாயிகள் பயன்பெறும் வகையில்  மதிப்பு கூட்டுப் பொருட்கள்  தயார் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா தலைமையில் காணொலி வாயிலாக நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், தருமபுரி ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் பகுதி - 2 திட்டத்திற்கு  ஜல்ஜீவன் மிஷன்  திட்டத்தின் கீழ் நிதி ஒதுக் கீடு செய்வதற்காக ரூ.450 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை  மத்திய அரசுக்கு  அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இப்பணிகள்  துவங்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம்  தரும புரி மாவட்ட குடிநீர் பிரச்சனையில் தன்னிறைவு கிடைக் கும்.  அதேபோல், சர்க்கரை ஆலையைப் பொறுத்த வரையில் கரும்பு வரத்து குறைவாக உள்ளது.  தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது,   தமிழக முழுவதும் கரும்பு சாகுபடி குறை வாக உள்ளது.  இதன் காரணமாக  தமிழகத்தில் உள்ள கூட்டு றவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு வரத்து குறைவாக உள்ளது.  மற்ற ஆலைகளில் இருந்து  கரும்புகளை நமது மாவட்ட ஆலைகளுக்கு  வழங்கிட தமிழ்நாடு சர்க்கரை ஆணையரக ஆணையரிடம் கோரிக்கை வைத்து நட வடிக்கை எடுக்கப்படும்.  தருமபுரி மாவட்டத்தில் தக்காளி அதிக அளவில் சாகு படி செய்யப்படுகிறது.  தக்காளி விவசாயிகள் பயன்பெறும் வகையில்  மதிப்பு கூட்டுப் பொருட்கள்  தயார் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

;