districts

img

திருமலைசமுத்திரம் ‘வன விருட்சம்’ மரங்கள் சரணாலயம் துவங்கி ஓராண்டு நிறைவு

தஞ்சாவூர், செப்.16 -  திருமலைசமுத்திரம் ஊராட்சியில் 216 வகையான அரிய, பாரம்பரிய மரங்களைக் கொண்டு, 7 ஏக்கரில்  உருவாக்கப்பட்ட விருட்ச வனத்துக்கு  மாணவ, மாணவிகளை வரவழைத்து, மரங்களை பற்றி எடுத்துரைத்தார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர். தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 7 ஏக்கரில் பாரம்பரிய, அரிய வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் விருட்ச  வனம் உருவாக்கப்பட்டது. கடந்தாண்டு  செப்.15 ஆம் தேதி இந்த விருட்ச வனத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  இதில் கருவாலி, திருவோடு, இத்தி,  சிவகுண்டலம், அத்தி, எட்டி, மாவி லங்கை, ருத்ராட்சம் என 216 வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த  மரக்கன்றுகள் நடப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, வியாழக் கிழமை திருமலைசமுத்திரம் பகுதி யில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளை விருட்ச வனத்துக்கு வர வழைத்து மாவட்ட ஆட்சியர் அங்குள்ள  மரங்களைப் பற்றியும், அதன் தன்மை களைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.  பின்னர் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை வழங்கி னார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கடந்தாண்டு செப்.15 ஆம் தேதி திரு மலைசமுத்திரம் கிராமத்தில் ‘வன விருட்சம் என்ற மரங்கள் சரணாலயம்’ தொடங்கப்பட்டு, தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதில் 216  வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.  இந்த சரணாலயத்தில் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் புங்கனூர் பசுக்கள் மற்றும் காளை வளர்க்கப்படுகிறது. அதேபோல் உல கத்திலேயே சிறிய ரகமான கோழி மற்றும் பெரிய கோழி இனங்களும் வளர்க்கப்படுகின்றன. மேலும், ஒருங் கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் மீன் பண்ணைக் குட்டையும், காய்கறி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு இந்த மரங்களின் சர ணாலயம் பெரிய அளவில் உதவிடும். செப்.15 முதல் பள்ளி, கல்லூரி மாண வர்கள் இந்த சரணாலயத்தை பார்வை யிடலாம். இன்னும் மூன்று வார காலத் தில் சுற்றுலாப் பயணிகளும் இந்த சரணாலயத்துக்கு வந்து பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன” என்றார்.