மன்னார்குடி, மார்ச் 28- சிறந்த மருத்துவமனைக்கான விருது களை நியூஸ் 18 சேனல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டின் டெல்டா மாவட்டங்களில் சிறந்த மருத்துவ மனைக்கான விருது தஞ்சை மீனாட்சி மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. இவ்விருதை தமிழக அரசின் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கி யுள்ளனர். விருதை பெறுவதற்கு பக்கபல மாய் செயல்பட்டு வரும் மீனாட்சி மருத்துவ மனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக் கும் மருத்துவமனை நிர்வாகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வ தாக அறிவித்துள்ளது.