districts

img

பட்டுக்கோட்டை: தேர்தல் பணிமனை திறப்பு விழா

தஞ்சாவூர், பிப்.13 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி, லட்சத்தோப்பு 22 ஆவது வார்டில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் சிபிஎம் வேட்பாளர் எம்.ஆர்.செந்தில்குமார் போட்டியிடுகிறார்.  இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா நடை பெற்றது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  கா.அண்ணாதுரை (திமுக) தேர்தல் அலுவ லகத்தை திறந்து வைத்து பேசினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்செல்வி, எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள், திமுக மூத்த நிர்வாகி செல்வராஜ், 20  ஆவது வார்டு வேட்பாளர் அன்பழகன், 22  ஆவது வார்டு அவைத் தலைவர், வழக்குரைஞர்  நடேசன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.