districts

ஒக்கநாடு கீழையூர் இறவை பாசன திட்டத்தை புனரமைக்க வேண்டும் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை

தஞ்சாவூர், டிச.31-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலை வர் ந.சுரேஷ் குமார், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘‘ஒக்கநாடு கீழையூர் இறவை பாசனத் திட்டத்தை புனரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் உதவி பொறியாளர் மீது உரிய  விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரத்தநாடு பகுதி முப்போ கம் சாகுபடி செய்யக்கூடிய இடமாகும். நெல்  உற்பத்தியும் கூடுதலாக நடக்கும் இடம். அறுவடை காலங்களில் நெல் கொள்முதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் விவ சாயிகள் மிகப்பெரும் சிரமத்தை தொடர்ந்து  அனுபவித்து வருகிறார்கள். எனவே, ஒரத்த நாட்டில் துணை மேலாளர் அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.  ஒக்கநாடு கீழையூர் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு சங்க அலுவலகக் கட்டிடம் பழுத டைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், நிர்வாக பணிகள் மற்றும் அதில் இயங்கி வந்த அங்காடி மையம் தற்போது  தனியார் இடத்தில் இயங்கி வருகிறது. இந்த  சங்கம் காவராப்பட்டு, கீழ வன்னிப்பட்டு, ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மக்களின் பயன் பாட்டிற்கு உள்ளது. அத்துடன் சேமிப்புக் கிடங்கும் இல்லாத நிலை உள்ளது. எனவே,  இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.