districts

img

திரு ஆரூரான் கரும்பு ஆலையில் விவசாயிகளின் பெயரில் மோசடியாக கடன் வாங்கிய கள அலுவலர்களை மீண்டும் பணியமர்த்தக் கூடாது!

கும்பகோணம், செப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள திருமண்டலகுடி யில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையின் அருகே உள்ள கிராமங்களில் இருந்து கரும்பு விவசாயிகள், தாங்கள் பயிரிட்ட கரும்புகளை ஆலைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான விலையை உடனடியாக வழங்காமல், நிலுவை இருந்த நிலை யில் ஆலய நிர்வாகத்தினர் விவசாயி களிடம் போலியாக கையெழுத்து பெற்றனர். மேலும், பாபநாசம் பாரத  ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கி களில் பல கோடி ரூபாய் கடனை பெற்று  மோசடி செய்து ஆலையை திடீரென மூடினர். இந்நிலையில் கடனை திரும்ப  செலுத்த வலியுறுத்தி, விவசாயி களுக்கு வங்கிகளில் இருந்து நெருக்கடி  கொடுத்தது. இதனால் ஆலை நிர்வா கம் விவசாயிகளின் பெயரில் மோசடி யாக வங்கியில் கடன் வாங்கியதை திரும்ப செலுத்த வலியுறுத்தி பல கட்ட  போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஆலை நிர்வாகம்,  ஆலையை திடீரென தனியார் நிறுவன மான ஹால்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டதாகவும், விவசாயிகளுக்கு சேர  வேண்டிய தொகையை பகுதி பகுதி யாக 4 தவணையாக, 60 முதல் 70 சத வீதம் தொகையை குறைத்து தருவதாக  அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளாத விவசாயி கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால் செப்.26 (திங்கட்கிழமை) மோசடி செய்த கள அலுவலர்களை கொண்டு, ஆலையை திறந்து பரா மரிப்பு  பணிகள் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து கரும்பு விவசாயிகள் சங்கத்தி னர் ஆலையை சூழ்ந்தனர்.

கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலச் செயலாளர் காசி நாதன் தலைமையில் ஆலைக்கு பூட்டு  போட்டு போராட்டம் நடத்தினர். போராட் டத்தில் சங்க செயலாளர் முருகேசன், பொருளாளர் ரவிச்சந்திரன், ராஜேந்தி ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கரும்பு விவசாயி களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக ஒரே தவணையில் வழங்க வேண்டும். இது வரை விவசாயிகளுக்கு தராத நிலுவைத் தொகையை வட்டியுடன் தர  வேண்டும். மோசடியாக விவசாயி களின் பெயரில் பெற்ற கடன்களை வங்கிகளில் திருப்பிச் செலுத்தி, ‘விவ சாயிகளின் பெயரில் கடன் இல்லை’ என  சான்று வழங்க வேண்டும். தனியார் நிறுவனத்தை அனுமதிக் காமல் ஆலையை அரசே எடுத்து நடத்த  வேண்டும். இது சம்பந்தமாக கரும்பு விவசாயிகள் சார்பில் சென்னையில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.  விவசாயிகளின் பெயரில் கோடிக்கணக் கான ரூபாயை மோசடி செய்த கள  அலுவலர்கள் கருப்பையன், வீரமணி, செந்தில், சந்தானகிருஷ்ணன், செங்குட் டுவன், சத்குரு, அம்மாபேட்டை பழநி ராஜா, மன்னார்குடி செந்தில் ஆகியோர்  மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய  வேண்டும். அவர்களை மீண்டும் பணிய மர்த்தக் கூடாது என வலியுறுத்தி ஆலைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.  இந்நிலையில் பாபநாசம் வட்டாட்சி யர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

;