districts

img

தஞ்சாவூர் அருகே லாரியின் பாரம் தாங்காமல் பாலம் இடிந்து சேதம் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு

தஞ்சாவூர், ஜூன் 6 – தஞ்சாவூர் அருகே  அன்னப்பன்பேட்டையில்,  ஏ - பிரிவு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்க்காலில் அமை ந்துள்ள பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். 

300 ஏக்கருக்கும் மேற் பட்ட விளைநிலங்களுக்கு விவசாயிகள் நடவு, அறு வடை இயந்திரம், டிராக்டர் கொண்டு செல்வதற்கு இந்த பாலத்தை பயன் படுத்தி வந்துள்ளனர்.

பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நிலை யில், பாலம் சேதமடைந்து வலுவிழந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலை ஏற் பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைத்துத்தர வேண்டும் என பலமுறை அதிகாரிக ளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஆனால் அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், வியா ழக்கிழமை அதிகாலை மூங்கில் ஏற்றிக் கொண்டு பாலத்தின் வழியாக வந்த  லாரியின் பாரம் தாங்கா மல் பாலம் இடிந்து உள் வாங்கியது. இதில் லாரி பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியது. பாலத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

புதிய பாலம் கட்டித்தருக இது குறித்து விவசாயி கள் கூறுகையில்,  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பாலம் வலு விழந்த நிலையில் இருப்ப தாக அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதின் விளைவு தான் பாலம் உடைந்து போனது.  இதனால், விவசாய பணிகளுக்கு செல்ல முடி யாத சூழல் உருவாகி நாங்கள் பாதிக்கப்பட்டுள் ளோம். அறுவடையாகும் நெல்லை எப்படி விற்பனை க்கு கொண்டு வருவது என தெரியவில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக, ஆய்வு செய்து புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

;