districts

கும்பகோணம் மரக்கன்று நடும் விழாவில் கதண்டு கடித்து 20 பேர் காயம்

கும்பகோணம், செப்.23 - தனியார் நிறுவன வளாகத்தில் நடை பெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 பேர் கதண்டு கடித்து காய மடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் எஸ்ஆர்விஎஸ் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற இயற்கை திருவிழாவில், குறுங் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் பாரம்பரிய  மரபு ரீதியிலான ஆயிரம் மரக்கன்றுகள் நடும்  விழா நடைபெற்றது.  இந்நிகழ்வில் கும்பகோணம் அருகே  உள்ள முத்தையாப்பிள்ளை மண்டபம் பகுதி யில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், தனியார்  நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு  நிறுவனத்தினர் என நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். விழா நிறைவு பெறும் சமயத்தில், அனைவருக்கும் சத்தான இயற்கை உணவுகள், தேங்காய் அவுல் சர்க்கரை, அவுல் பொங்கல், சீரகநீர், பான கம், வெட்டிவேர் நீர், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டன.  அப்போது விழா நடைபெறும் இடத் திற்கு அருகில் இருந்த அரசமரத்திலிருந்து கதண்டுகள் திடீரென விழாவில் கலந்து கொண்டோரை சூழ்ந்து கொட்ட தொடங்கி யது. இதில் இருந்து தப்பிக்க அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இருப் பினும் அவர்களை கொட்டியது.  இதில் பள்ளி குழந்தைகள் 12 பேர், அவர்களுடன் வந்த ஆசிரியர்கள் 2 பேர்,  பத்திரிகை செய்தியாளர் ஒருவர், தொலைக் காட்சி ஒளிப் பதிவாளர்கள் 2 பேர் மற்றும் தனி யார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். அவர்கள்  அனைவருக்கும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

;