districts

மரக்காவலசை கிராமத்தில் மனைப்பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு இடத்தை அளவீடு செய்து தர கோரிக்கை

தஞ்சாவூர், அக்.16-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ்.விழா அரங்கில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின், சேது பாவாசத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப் பெருமாள் தலைமை வகித்தார். வி.தொ.ச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், வி.தொ.ச ஒருங் கிணைப்பாளர்களாக இளங்கோ, சேகர், செந்தில்குமார், லெட்சுமணன், அசோக், ராஜேந்திரன், சரளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  இதில், மருங்கப்பள்ளம் பகுதியில் விவ சாயத் தொழிலாளர்களுக்கு குடிமனைப்  பட்டா வழங்க வேண்டும். மரக்காவலசை யில் அரசால், 40 குடும்பங்களுக்கு குடி மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது வரை அதற்கான இடம் அளவீடு செய்து தரப்படவில்லை. எனவே, குடியிருக்கும் பகுதியிலேயே இடத்தை அளந்து வழங்க வேண்டும்.  தனியார் இடங்களில் 40, 50 ஆண்டு களாக குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப்  பட்டா வழங்கி, மின் இணைப்பு வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் சட்டவிரோதமாக காலை 7 மணிக்கே வர வேண்டும் என்பதை மாற்றி, மீண்டும் 9 மணிக்கு பணிக்கு வரலாம் என உத்தரவிட வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை விவசாயப் பணிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். புதிதாக குடிமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் குடிமனைப் பட்டா, அரசு வீடு, மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.