தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மகளிர் உரிமைத் துறை மற்றும் திருநங்கையர்கள் நல வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை உட்பட 121 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையினை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து திருநங்கையர்களுக்காக அமைக்கப்பட்ட மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.