தஞ்சாவூர், செப்.9- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தொன்மை பாதுகாப்பு மன்றம், மற்றும் நுண்கலை மன்றம் சார்பில் மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்ட னர். பட்டுக்கோட்டை சிவன் கோயில் அமைப்பு, சிற்பங் கள், ராமர் மடம் போன்றவை தோன்றிய விதம் பற்றி மாணவர்களுக்கு நேரடி யாக விளக்கப்பட்டது. பின்னர், பட்டுக் கோட்டை நகராட்சி அலுவல கத்திற்கு நேரில் சென்று மாணவர்கள் பார்வையிட்ட னர். மாணவர்களுக்கு நக ராட்சி ஆணையர் சௌந்தர் ராஜன், நகராட்சி நிர்வாக முறை குறித்து விளக்கினார். நகராட்சி பொறியாளர் குமார் நகர நிர்வாக இருக்கை அமைப்புப் பற்றி விளக்கிக் கூறினார். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் மன்றச் செயல்பாடுகள் உண்மை யிலேயே மாணவர்களுக்கு ஆர்வத்தையும் நேரிடை யான அனுபவத்தையும் தந் தது. பள்ளித் தலைமை ஆசிரி யர் அ.சக்திவேல் வழிகாட்டு தலில், தொன்மை பாது காப்பு மன்ற பொறுப்பா ளர்கள் பட்டதாரி ஆசிரியர் கள் எம்.பகவதி, நுண்கலை மன்ற பொறுப்பாளர் எஸ். மைதிலி ஆகியோர் மாண வர்களுடன் சென்றனர். இந்த களப்பயணத்தில் 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்ட னர்.