districts

img

தமிழக வாலிபால் அணியில் தங்கப்பதக்கம்: பேராவூரணி மாணவருக்கு ஆளுநர் பாராட்டு

தஞ்சாவூர், செப்.5-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள  நாடியம் பகுதியைச் சேர்ந்த வர் விவசாயி ரவிச்சந்தி ரன்-குணரேகா தம்பதி. இவர்களின் மகன் ரகுராம்  சென்னை டி.ஜி.வைஷ் ணவா கல்லூரியில், பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா என்ற இடத்தில், கடந்த ஜூன் 4  முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற்ற 4 ஆவது  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில், தமிழக வாலிபால் அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். மேலும், வாலிபால் ஜூனியர் நேஷனல் போட்டியில் தங்க மும், மினி நேஷனல் போட்டி யில் வெண்கலமும் பெற்றுள் ளார்.  இந்நிலையில் தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி,  அண்மையில் தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருந்தளித்து பாராட்டினார். அப்போது, தமிழக வாலி பால் அணியில் கலந்து கொண்டு விளையாடிய பேராவூரணி நாடியம் பகுதி  மாணவர் ரகுராமுக்கு பாராட் டும், வாழ்த்தும் தெரிவித் தார். முன்னாள் செஸ் சாம்பி யன் விஸ்வநாதன் ஆனந்த்  மற்றும் பலர் உடனிருந்தனர்.