தஞ்சாவூர் சரகக் காவல்துறை துணைத்தலைவர் ஏ.கயல்விழி உத்தரவின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்கும் பொருட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினரை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் அனைவருக்கும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஏ.கயல்விழி திங்களன்று பண வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.