தஞ்சாவூர், ஜன.5- தஞ்சையில் 2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதி களில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 844 பேரும், பெண் வாக்காளர் கள் 10 லட்சத்து 49 ஆயிரத்து 103 பேரும், இதர பாலினத்த வர் 169 பேரும் என மொத்தம் 20 லட்சத்து 43 ஆயிரத்து 116 வாக்காளர்கள் உள்ளனர்.